sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

நம்மிடமே இருக்கு மருந்து - பிரண்டை!

/

நம்மிடமே இருக்கு மருந்து - பிரண்டை!

நம்மிடமே இருக்கு மருந்து - பிரண்டை!

நம்மிடமே இருக்கு மருந்து - பிரண்டை!


PUBLISHED ON : டிச 31, 2023

Google News

PUBLISHED ON : டிச 31, 2023


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேலிகளில் படர்ந்து வளரும் தாவரம் தான், பிரண்டை. நீர் அதிகம் தேவையில்லை. அதன் தண்டை நட்டு வைத்தால் போதும், தானாகவே வளர்ந்து விடும்.

* பிரண்டை செடிகளில், ஓலைப் பிரண்டை, உருண்டைப் பிரண்டை, முப்பிரண்டை, சதுரப் பிரண்டை என, பல வகைகள் உள்ளன. இதன் தண்டு, வேர், பழம் அனைத்தும் மருத்துவ குணம் கொண்டது

* எலும்பு முறிவை குணப்படுத்த உதவுகிறது. மேலும், எலும்புகளையும், மூட்டுகளையும் வலிமையாக்குகிறது

* எலும்புகளின் அடர்த்தியை மீட்க உதவுகிறது. ஒரு சிறந்த வலி தீர்க்கும் மருந்தாக பயன்படுகிறது

* வாயுவால் எலும்பு மற்றும் நரம்புகளின் இணைப்புகளில் தேவையற்ற நீர் தங்கி விடும். பின், அவை முதுகுத் தண்டு மற்றும் கழுத்து பகுதிக்கு இறங்கி, பசை போல் அங்கேயே இருந்து, தாங்க முடியாத கழுத்து மற்றும் முதுகு வலியை தரும்.

இதனால், கழுத்தை திருப்பவோ, குனியவோ முடியாமல் அவதிப்படுவர். பிஞ்சு பிரண்டையை உலர்த்தி, பொடி செய்து, அதனுடன் சிறிது வெந்நீர் கலந்து பற்று போட்டால், முதுகு மற்றும் கழுத்தில் உள்ள நீர்ப்பசை இளகி, முதுகு வலி மற்றும் கழுத்து வலி குணமாகும்

* ரத்த தேங்கு நிலை மற்றும் ரத்தப்போக்கை சரி செய்ய உதவுகிறது. மேலும், மூல நோயை குணப்படுத்தவும் உதவுகிறது

* செரிமானத்தை ஊக்குவிக்கிறது. கல்லீரல் சேதத்தை தடுக்கிறது

* குடற் புழுக்களை அகற்றும் தன்மை கொண்டது. ரத்தத்தை சுத்திகரிக்கிறது

* நரம்புகள் மற்றும் தசைகளை அமைதிப்படுத்தும் மருந்தாக, பிரண்டை சாறு செயல்படுகிறது

* மூலம், கீழ் வாதம், வெள்ளைப்படுதல் போன்ற பிரச்னைகளுக்கும், சிறந்த தீர்வளிக்கிறது

* பசி எடுக்காதவர்கள் அல்லது அஜீரணத்தால் அவதிப்படுவோர், பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்டு வந்தால், வாயுத் தொல்லை மட்டுப்படும். சுவையின்மை மறைந்து, பசி அதிகரிக்கும்

* உடலின் அதிக எடையை குறைப்பதற்கு, பிரண்டையை உட்கொள்ளலாம்

* பிரண்டை துவையல் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால், ரத்த ஓட்டம் சீராகும்; இதயமும் பலப்படும்

* பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் முகுது வலி, இடுப்பு வலி போன்றவற்றிற்கு, பிரண்டை சிறந்த மருந்தாகும். இது, உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்றுநோய்க்கு கொடுக்கப்படும் மருந்துகளில் பிரண்டையும் இடம்பெற்றிருக்கும்

* பிரண்டை சாற்றைக் கொண்டு வாய் கொப்பளித்தால், பல் ஈறுகளில் ஏற்படும் ரத்தக் கசிவு மற்றும் பல் ஈறுகளில் உண்டான அழற்சி போன்றவை குறையும். மேலும், பற்களில் படிந்திருக்கும் சீமை சுண்ணாம்பை சுத்தமாக்கும். பிரண்டையில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு தன்மை காரணமாக, பற்களில் நுண்ணுயிர் வளர்ச்சி தடுக்கப்படும்.

தொகுப்பு : மு. நந்தனா






      Dinamalar
      Follow us