PUBLISHED ON : ஜன 28, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தினமும் தென்னை மரங்களில் ஏறி, கள் சேகரிப்பது மிகவும் சிரமமான வேலை. இந்த வேலையை செய்ய, 'ரோபோ'வை தயாரித்திருக்கிறது, கேரளா நிறுவனம் ஒன்று.
'டாப்பிங் ரோபோ' என, அழைக்கப்படும் இந்த இயந்திரத்தை, தென்னை மரம் மீது வைத்தால் போதும். அது, விறு விறுவென்று மரத்தில் ஏறி, கள் சேகரித்து, அதில் பொருத்தப்பட்டுள்ள நீளமான குழாய் வழியாக மரத்துக்கு கீழே வைத்திருக்கும் பாத்திரத்தில் நிரப்பி விடும்.
மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளில், கள் வியாபாரம் கொடிகட்டி பறக்கிறது. அதிக அளவில் இயந்திரம் தயாரித்து, இந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இருப்பதாக, இதன் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
— ஜோல்னாபையன்