/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
84 வயதிலும், நாட்டியம் ஆடும் கலைஞர்!
/
84 வயதிலும், நாட்டியம் ஆடும் கலைஞர்!
PUBLISHED ON : பிப் 04, 2024

கலாஷேத்ராவில் படித்த, பரதநாட்டிய கலைஞரான, விலாசினி, 84 வயதிலும் முதுமை பற்றிய கவலை ஏதும் இல்லாமல், இளம் பெண்களை போல, நடனம் ஆடி வருகிறார். பரதத்துடன் குச்சிபுடியும் இவருக்கு அத்துப்படி.
கடந்த, 70 ஆண்டுகளுக்கு முன், கேரளா அரசின், 75 ரூபாய், 'ஸ்காலர்ஷிப்'புடன் சென்னை வந்து, கலாஷேத்ரா பள்ளியில் சேர்ந்தார்; நாட்டியம் பயிலத் துவங்கிய இவர், இன்றும், பரதத்துக்கு ஓய்வு கொடுக்கவில்லை.
மேடை ஏறி, நடனம் ஆடுவதும், நடிப்பதும், பெண்களுக்கு உகந்தது அல்ல என நினைத்த காலத்தில், துணிவுடன் பெற்றோர் செயல்பட்டதால், இந்த அற்புத கலைஞர் உருவானார்.
இந்த வயதிலும், திருவனந்தபுரத்தில், தனக்கு தெரிந்த நடன வித்தைகளை, இளம் தலைமுறையினருக்கு கற்றுக் கொடுத்து வருகிறார்.
—ஜோல்னாபையன்