PUBLISHED ON : பிப் 11, 2024

வடகிழக்கு சீனாவின், ஹய்லாங்ஜியங் மாகாணத்தின் தலைநகரான ஹார்பின் நகர், ஒரு குளிர் பிரதேசம். இங்கு, டிசம்பர், ஜனவரியில், கடும் குளிர் நிலவுவதுடன், குறைந்தபட்ச வெப்பநிலை, -17.3 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.
இந்தக் குளிரில், ஆண்டுதோறும் இங்கே, பனிச்சிற்பம் மற்றும் கண்காட்சித் திருவிழா நடத்தப்படுகிறது. அதன்படி, 2024ம் ஆண்டுக்கான விழா, அண்மையில் நடைபெற்றது.
பனிச்சிற்ப போட்டியில், உலக நாடுகளைச் சேர்ந்த பல்வேறு குழுவினர் பங்கேற்று, தாங்கள் உருவாக்கிய பனிச் சிற்பங்களை காட்சிப்படுத்தினர்.
இந்த பனிச்சிற்ப விழாவில் பங்கேற்பதற்காக, ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர்.
சீனாவுடன் உலகின் பல்வேறு நாடுகள் தடையற்ற வர்த்தகத்தை மேற்கொள்ள, இதுபோன்ற அழகியல் ரீதியிலான உருவாக்கங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன.
-ஜோல்னாபையன்