PUBLISHED ON : பிப் 18, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உலகில் மழையே பெய்யாத ஒரு கிராமம் உள்ளது.
மேற்கு ஆசியாவில் உள்ள ஏமன் நாட்டின் தலைநகர் சனாவில், 'அல்-ஹுதைப்' என்ற கிராமம் தான் அது. இந்தக் கிராமம், தரை மட்டத்திலிருந்து, 3,200 மீட்டர் உயரத்தில், சிவப்பு மணற்கல் மலையின் உச்சியில் உள்ளது. மற்ற இடங்களை விட உயரமாக இருந்தாலும், இந்த இடம் வறட்சியுடன் காணப்படுகிறது.
இங்கே, பகலில் அதிகப்படியான வெப்பமும், இரவில் உறைபனி குளிரும் இருக்கும்.
நீர் ஆதாரங்கள் போதுமானதாக இல்லாததும் மற்றும் அங்கு மேகங்கள் குவியாத உயரத்தில் கிராமம் அமைந்துள்ளதும் தான், இந்தக் கிராமத்தில் மழை பெய்யாததற்கு காரணம்.
சாதாரண மழை மேகங்கள், சமவெளியில் இருந்து, 2,000 மீட்டருக்குள் குவியும். இந்த உயரத்துக்கு அதிகமாக இருப்பதால், இக்கிராமத்தின் மீது மேகங்கள் குவிவதில்லை.
—ஜோல்னாபையன்