sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அமெரிக்க அதிபரின் கார்!

/

அமெரிக்க அதிபரின் கார்!

அமெரிக்க அதிபரின் கார்!

அமெரிக்க அதிபரின் கார்!


PUBLISHED ON : பிப் 25, 2024

Google News

PUBLISHED ON : பிப் 25, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமெரிக்க அதிபர் பயன்படுத்தும் கார்கள், 'கேடிலாக் ஒன், பர்ஸ்ட், பீஸ்ட்' போன்ற பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இதில் பிரபலமானது, 'பீஸ்ட்' கார். 'ஸ்டேஜ் கோச்' என்ற குறியீட்டு பெயரும் இதற்கு உள்ளது.

அமெரிக்க அதிபர், உலகில் எந்த நாட்டுக்கு சென்றாலும், ஒரே பதிவெண் கொண்ட இரண்டு, 'பீஸ்ட்' கார்கள் விமானம் மூலம் கொண்டு செல்லப்படும்.

இந்த காரின் சிறப்பம்சங்கள்:

* சமீபத்திய மாடல், 'பீஸ்ட்' காரை, ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், செப்., 2018-ல் அறிமுகம் செய்தது

* இதன் எடை, 6,800 முதல் 9,100 கிலோ வரை இருக்கும். இதில், ஏழு பேர் பயணம் செய்யலாம். இதன் நீளம், 18 அடி

* அவசர காலத்தில் பயன்படுத்த அதிபரின், ரத்த குரூப், இதில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும்

* ரசாயன தாக்குதல் நடத்தினாலும், காருக்குள் இருக்கும் அதிபருக்கு பாதிப்பு ஏற்படாது. டயர் பஞ்சர் ஆனாலும் கார் ஓடும்

* இருள் சூழ்ந்த பகுதியிலும் தெளிவாக பார்க்கும் கருவிகள், தாக்குதலில் இருந்து தப்பிக்க, புகை மண்டலத்தை ஏற்படுத்தும் சாதனம், எதிரிகளின் வாகனம் பின் தொடர்வதை தடுக்க, எண்ணெய் பீய்ச்சி அடிக்கும் சாதனம் ஆகியவை இதில் உள்ளன

* அலுமினியம், செராமிக் மற்றும் எஃகு பயன்படுத்தி, கவச வாகனம் போல் இந்த கார் தயாரிக்கப்பட்டுள்ளது

* காரின் வெளிப்புற தகடுகள், 8 அங்குலம் தடிமன் கொண்டவை. கார் கண்ணாடிகள், 130 மி.மீ., தடிமனில் பல அடுக்குகளாக இருக்கும். காரின் ஒவ்வொரு கதவும், போயிங் 757 விமான கதவின் எடை அளவுக்கு இருக்கும். எதிரிகள் யாரும் கார் கதவை திறப்பதை தடுக்கும் வகையில், அதன் கைப்பிடியில், 120 வோல்ட் மின்சாரத்தை பாய்ச்சி, 'ஷாக்' கொடுக்கும் வசதியும் உள்ளது

* துப்பாக்கிகள், ராக்கெட் குண்டுகள், கண்ணீர் புகை குண்டுகளை ஏவும் வசதிகளும் உள்ளன

அதிபரின் கார் அணிவகுப்பில், ஒரே பதிவெண் கொண்ட, இரண்டு கார்கள் செல்வது வழக்கம்.

* இதன் விலை, 12.45 கோடி ரூபாய். ஆனால், இந்த காரின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு, 124 கோடி ரூபாயை, ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் செலவிட்டுள்ளது.

ஜோல்னாபையன்






      Dinamalar
      Follow us