sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பதில்கள்!

/

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : மார் 10, 2024

Google News

PUBLISHED ON : மார் 10, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வைகை வளவன், மதுரை: நுாலகம், மருத்துவமனை, ஜல்லிக்கட்டு அரங்கம், பஸ் நிலையம் என்று, எதை எடுத்துக் கொண்டாலும், அவற்றுக்கு, கருணாநிதி பெயரை வைக்கிறதே, தி.மு.க., அரசு.

நல்லவேளை, தமிழ்நாட்டுக்கு, கருணாநிதி நாடு என பெயர் மாற்றம் செய்யாமல் இருக்கின்றனரே... அதுவரை நிம்மதி கொள்ளுங்கள்!

ஓ.என். ராமநாதன், மதுரை: தமிழ்நாட்டில், காங்கிரசின் புதிய தலைவர், செல்வப்பெருந்தகை, காங்கிரசை கரை சேர்ப்பாரா?

செல்வப்பெருந்தகையின் முகமே, தமிழ்நாட்டில், 99 சதவீதம் பேருக்கு தெரியாதே... அப்படி இருக்கையில், இவர் எப்படி, காங்கிரசை கரை சேர்ப்பார்?

    

* த. வேல்முருகன், ஈரோடு: 'அமைச்சர்களாக இருப்போர், மக்கள் மத்தியில், சுத்தமானவர்களாக இருக்க வேண்டும்...' என்று, ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியுள்ளாரே...

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து, 100க்கு 100 வரவேற்புக்கு உரியதே. ஆனால், தமிழகத்தில், அவரின் கருத்து நிறைவேற, வாய்ப்பே இல்லையே!

டபிள்யூ. ரோமேரோ, நெல்லை: முகமறியா, அந்துமணியின், முகமே முகவரியானது குறித்து...

தபால் துறையினர் கெட்டிக்காரர்கள். அதனால், அவர்களுக்கு, அந்துமணியின் முகமும், முகவரியும் தெரிந்திருக்கிறது. எனவே, கடிதங்கள் எனக்கு வந்து சேர்கின்றன!

டி. லிங்கேஷ்குமார், சென்னை: துப்பாக்கி சுட கற்றுக்கொண்ட போது, என்ன நினைத்தீர்கள்?

ஒரு போதும் இதை தவறாக பயன்படுத்தி விடக்கூடாது என்று நினைத்து, உறுதி எடுத்துக் கொண்டேன்; அது போலவே, இன்றுவரை நடந்து வருகிறேன்!

* பி. பாரதி, திருச்சி: அரசு நுாலகங்களில், பெயரே கேள்விப்படாத, வார, மாத இதழ்கள், பல குவிந்து கிடக்கின்றனவே...

அவற்றை படித்துப் பாருங்கள். அவை, தி.மு.க.,விற்கும், தி.மு.க., அரசிற்கும், 'ஜால்ரா' தட்டுபவை என்பதை, தெரிந்து கொள்வீர்கள்!

எஸ். பிரசன்னா, செங்கல்பட்டு: கோழை தனம் கூடாதா?

கூடவே கூடாது... அதற்கு பதில், பணிவு வேண்டும்; துணிவு வேண்டும்; ஆனால், தலைக்கனத்தை கூட்டிக் கொள்ளவே கூடாது!






      Dinamalar
      Follow us