/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
கவிதைச்சோலை - மனித நேயத்தின் மகத்தான சேவை!
/
கவிதைச்சோலை - மனித நேயத்தின் மகத்தான சேவை!
PUBLISHED ON : மார் 24, 2024

முரண்டு பிடிக்காமல்
வாய்ப்பை விட்டுக் கொடுப்பது
ஏமாளித்தனம் அல்ல...
நட்பை விரிவடையச் செய்யும்
புத்திசாலித்தனத்தின் அடையாளம்!
எதிர்த்து பேசாமல்பணிந்து செல்வது
அடிமைத்தனம் அல்ல...
பெருமையை பறைசாற்றும்
உயரிய சிந்தனை!
ஆணவம் கொள்ளாமல்
அடக்கத்தோடு வாழ்வது
கோழைத்தனம் அல்ல...
எதிரியை வசப்படுத்தும்
ராஜ தந்திரம்!
கிள்ளி கொடுக்கும் இடத்தில்
அள்ளி கொடுப்பது
ஊதாரித்தனம் அல்ல...
தர்ம குணத்தை
உயரத்தில் நிறுத்தும்
பெருந்தன்மை மிக்க செயல்!
சந்தேக பிசாசை விரட்டி
நம்பிக்கை வளர்ப்பது
கோமாளித்தனம் அல்ல...
பிரிவினைக்கு தடைபோடும்
தாரக மந்திரம்!
உயிர்களின் இதயத்தில்
நேசத்தை நிரப்புவது
உணர்வுகளின் வெளிப்பாடு அல்ல...
உறவுகளை வலுபடுத்தும்
மனிதநேயத்தின்
மகத்தான சேவை!
—மணியட்டி மூர்த்தி, கோவை.