PUBLISHED ON : மார் 31, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நம்மூரில், போலீசார் கை காட்டினாலும், விசில் அடித்தாலும், வாகனங்களை நிறுத்தாமல், அவர்களுக்கு, 'டிமிக்கி' கொடுக்கும் சம்பவங்கள் அன்றாடம் நடைபெறுவதுண்டு. இவர்களை துரத்தி பிடிக்கும் முயற்சியில் உயிர்சேதங்கள் ஏற்படுவதும் உண்டு.
இதுபோன்ற சம்பவங்களில், வாகன ஓட்டிகளுக்கு தடை ஏற்படுத்த வெளிநாடுகளில், 'கார் ஸ்ட்ரிப்' என்ற முள் கருவியை வைத்து, வாகன சக்கரங்களை, 'பஞ்சர்' ஆக்கி, குற்றவாளிகளை மடக்கி பிடிக்கின்றனர்.
கேரளா போலீசாரும் இதுபோன்ற கருவிகளை பயன்படுத்துவது பற்றி ஆலோசித்து வருகின்றனர். விரைவில் கேரளா சாலைகளில், இந்த முள் கருவியை காணலாம்.
ஜோல்னாபையன்