PUBLISHED ON : ஏப் 07, 2024

நோட்டாவுக்கு போட்டாலும்
பரவாயில்லை
ஓட்டே போடாமல் இருப்பது
சரியல்ல...
கட்டாயம் ஓட்டு போடுவது கடமைபோடாவிட்டால் என்ன என்பது மடமை!
ஓட்டு உரிமை யாவருக்கும் பொதுவுடமை
ஓட்டளித்தல் ஜனநாயகக் கடமை
ஓட்டு உரிமை நம்முடைய சொத்து
ஓட்டளிப்பது ஒன்று தான்
வாக்காளனின் கெத்து!
உன்னோட தலைவனுக்கு
ஒரு ஓட்டு போட்டு
உயிரோடு நீ இருப்பதை
உலகுக்குக் காட்டு
ஒவ்வொரு ஓட்டுக்கும்உயிர் இருக்கு மறவாதே
உயிர் உனக்கு இருக்கிறதென்றால்
ஓட்டுப் போடத் தவறாதே!
வாக்காளர் அட்டை
இருப்பிடச் சான்று
ஓட்டளித்தேன் என்பது
இருப்பதற்கு சான்று
உன்னோட ஓட்டு
பொன்னான ஒண்ணு
மறக்காமல் போய்ப் போடு
முன்னாடி நின்னு!
உன்னோட ஓட்டு
உனக்காகக் காத்திருக்கு
நீ போய் போட்டால் தான்
அதற்கான மதிப்பிருக்கும்
நம்மோட ஓட்டு நமக்கான உரிமை
ஓட்டளிக்க மறந்தால்
நாமொரு அடிமை!
எவர் ஆண்டால் எனக்கென்னஎன்று மட்டும் இருக்காதே
உன்னுடைய ஒரு ஓட்டை
ஒருபோதும் மறக்காதே
நல்லா இருக்கணும் நாடு என்றால்
ஓட்டுப் போட்டுக் காட்டு
நல்ல குடிமகனுக்கு அதுதானே
எடுத்துக்காட்டு!
மறக்காமல் ஓட்டளிக்க
உறுதிமொழி எடுப்போம்
ஓட்டளிக்க மறக்கும் வழக்கத்தை
ஒழிப்போம்!
— கே.ஜே.செல்வராஜ், கோத்தகிரி.