
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஏப்ரல் 21, கி.மு., 753, ரோம் நகர் (இத்தாலி) உருவான தினம்.
1526, லோடி பரம்பரையைச் சேர்ந்த, கடைசி லோடியான இப்ராகிம் லோடியை, தைமூர் வம்சத்தைச் சேர்ந்த பாபர், தோற்கடித்து, முதல் பானிபட் யுத்தத்தில் வென்றார். அத்துடன், இந்தியாவில், முகலாய ஆட்சியை நிறுவினார், பாபர்.
1837, முதல் கிண்டர் கார்டன் ஸ்கூல் ஜெர்மனியில், போபெல் என்ற ஆசிரியரால் துவக்கப்பட்டது.
1925, எழுத்தாளர் வண்டுமாமா பிறந்தநாள்.
1926, இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள்.
1944, பிரான்சில், பெண்களுக்கு முதன் முதலில் ஓட்டுரிமை கிடைத்த நாள்.
1945, பிரபல இந்திய சுழற்பந்து வீச்சாளர், வெங்கடராகவன் பிறந்தநாள்.
1964, பாவேந்தர் பாரதிதாசன் இறந்தநாள்.
1978, பிரபல தமிழ் திரைப்பட நடிகர், டி.ஆர். மகாலிங்கம் இறந்த நாள்.
2013, கணித மேதை சகுந்தலா தேவி இறந்த நாள்.