
ஆர்.ரோஸி, சென்னை: பழமையான தமிழ் எழுத்துக்கள், . இந்த எழுத்துக்களை ஏன் நீக்கி விட்டனர்?
கம்ப்யூட்டரில் அவை எல்லாம் இல்லை!
டி.ஜூலியட், கோயம்புத்துார்: துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில், சைவாள் ஹோட்டல்களில் சாப்பிட்ட அனுபவம் உண்டா?
சைவ ஹோட்டலில் மட்டும் தான் சாப்பிடுவேன் என, உங்களுக்குத் தெரியும் தானே... ஸ்ரீவைகுண்டத்திலும் சாப்பிட்டு இருக்கிறேன்!
பாரதிமுருகன், மணலுார்பேட்டை: காலையில் தவறாமல் படிக்கும் நியூஸ் பேப்பர் எது?
முதலில், 'தினமலர்' நாளிதழ். பின்னர், மற்ற மூன்று தமிழ் நாளிதழ்கள்!
* டி.என்.பாலசுப்ரமணியன், சென்னை: இந்த கோடைக்காலத்தில், உங்கள் அலுவலகம் வந்தவர்களுக்கு, தாகம் தணிக்க, என்ன கொடுத்தீர்கள்?
தினமும் காலை, 11:00 மணி முதல், மதியம், 3:00 மணி வரை, நீர் மோர்!
எஸ்.கே.ராமசாமி, சென்னம்பட்டி, ஈரோடு: தமிழ்நாட்டில், 'தினமலர்' நாளிதழ் போன்று, ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டும், 'தில்'லான பத்திரிகைகளைக் காண்பது அரிதாகி விட்டதே...
'தினமலர்' நாளிதழ் வெளியாவது, முதலாளிகளான, வாசகர்களுக்காக மட்டுமே!
* டி.ஜெயசிங், கோவை: திருச்சி பதிப்பு, 'தினமலர்' நாளிதழுடன், சென்னை - வாரமலர் வெளியாவதில்லை. ஆனால், சென்னை - வாரமலரில், வாரா வாரம் திருச்சி வாசகர் படைப்புகள் இடம்பெறுவது எப்படி?
'தினமலர்' நாளிதழ் டிஜிட்டல் பதிப்பில், வாரமலர் இதழை படித்து, சென்னை அலுவலகத்துக்கு, இ - மெயிலில் படைப்பை அனுப்புகின்றனர்!
எம்.மேகராணி, ஊட்டி: அந்து, உங்கள் பழைய சைக்கிள் ஒன்றை எனக்கு பரிசாக குடுப்பீர்களா?
இதோ... இங்கே இருக்கிறதே, இது போதுமா?

