PUBLISHED ON : மே 15, 2016

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கேரள மாநிலம், கோட்டயத்தை அடுத்த, சிங்கவனம் எனும் ஊரைச் சேர்ந்தவர் மரியக்குட்டி. இவர், சிறுவயதிலிருந்தே கன்னியாஸ்திரியாகி, ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற லட்சியத்தை கொண்டிருந்தார். அதேபோன்று கன்னியாஸ்திரி ஆகி, கோட்டயம் மருத்துவ கல்லூரியில் படித்து, மகப்பேறு மருத்துவராக ஆனார். தற்போது, 63 வயதாகும் மரியக்குட்டி, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு பிரசவத்தின் போது, மருத்துவ சேவை செய்துள்ளார். 'சிஸ்டர் டாக்டர் மேரி மார்சலஸ்' என்று தன் பெயரை மாற்றியுள்ள இவர், 36 ஆண்டுகளாக மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.
— ஜோல்னாபையன்.

