தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நிர்வாண சிற்ப கண்காட்சி பார்க்க நிர்வாண கோலத்தில் பார்வையாளர்கள்!

நிர்வாண சிற்ப கண்காட்சி பார்க்க நிர்வாண கோலத்தில் பார்வையாளர்கள்!

நிர்வாண சிற்ப கண்காட்சி பார்க்க நிர்வாண கோலத்தில் பார்வையாளர்கள்!


PUBLISHED ON : மார் 10, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 10, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆஸ்திரியா நாட்டின் தலைநகர் வியன்னாவில், நிர்வாண சிற்ப கண்காட்சி சமீபத்தில் நடந்து முடிந்தது. '1800 முதல் இன்று வரை நிர்வாண மனிதர்கள்' என்ற பெயரில் நடைபெற்ற, இக்கண்காட்சியில், 1800ம் ஆண்டு முதல் இன்று வரை காணப்பட்ட மனிதர்களின் வாழ்க்கை குறித்த, பல்வேறு நிலைகளிலான, நிர்வாண சிற்பங்கள், 300க்கும் மேற்பட்ட ஓவியங்கள், புகைப்படங்கள் ஆகியவை இடம் பெற்றன. கடந்தாண்டு, அக்., 12ம் தேதி, இங்குள்ள லியோ வேர்ல்டு மியூசியத்தில் துவங்கிய இக்கண்காட்சியை, நிர்வாணமாக சென்று பார்க்க, சிலர் விரும்பினர். அங்குள்ள நிர்வாணத்தினர் சங்கம் சார்பில், நிர்வாணமாக, கண்காட்சியை பார்வையிட, தனி நேரம் ஒதுக்கித் தருமாறு, கண்காட்சி அமைப்பாளர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதை ஏற்றுக்கொண்ட, கண்காட்சி அமைப் பாளர்கள், ஒவ்வொரு வாரமும், திங்கட்கிழமை மாலை நேரத்தை, நிர்வாணத்தினர் மட்டும், பார்வையிட அனுமதி அளித்தனர். மேலும், 'நிர்வாண சிற்ப கண்காட்சியை காண, நிர்வாணமாக வாருங்கள்!' என்று அறிவிக்கவும் செய்தனர். இதை அடுத்து, ரசிகர்கள் நிறைய பேர் கண்காட்சியை காண ஆர்வத்துடன் நிர்வாணமாக, படை எடுத்தனர். 250க்கும் மேற்பட்டோர், நிர்வாணமாக சென்று, கண்காட்சியை பார்வையிட்டும், புகைப்படம் எடுத்தும், வந்துள்ளனர்.

கண்காட்சியை நிர்வாணமாக சென்று பார்வையிட்டு வந்த, ப்ளேரியன் கோலன்பெர்க் என்பவர் கூறுகையில், 'கண்காட்சியை காண, ஷூ மற்றும் சாக்ஸ் தவிர, பிற அனைத்து ஆடைகளையும் களைந்து, நிர்வாணமாக சென்று பார்வையிட்டேன். கண்காட்சியில் இருந்தவர்கள் முதலில் என்னை பார்த்து அதிர்ச்சி அடைந்தாலும், என்னைப் போல் நிறைய பேர் அங்கு நிர்வாணமாக வந்த பிறகு, அவர்களது அதிர்ச்சி மறைந்து விட்டது. கண்காட்சியை காண இவ்வாறு நடந்து சென்றது, 'த்ரில்லிங்'காக, இருந்தது...' என்றார்.

வியன்னாவில், நான்கு மாதங்களாக நடைபெற்ற இக்கண்காட்சியை, மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.

— ஜோல்னா பையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us