
ஜூன் 21, யோகா தினம்
ஆரோக்கியத்தை மேம்படுத்தும் யோகா பயிற்சி, ஒருவருடைய உடலையும், மனதையும் ஒருநிலைப் படுத்துவதோடு, உடல் வலிமை பெறுவதற்கும் பெரிதும் உதவுகிறது.
யோகா பயிற்சி செய்வதற்கு முன், கவனிக்க வேண்டியவை:
* யோகா பயிற்சி மேற்கொள்ளும் இடங்கள், நல்ல காற்றோட்டத்துடன், சுத்தமாகவும், அமைதியாகவும் இருக்க வேண்டும்
* இப்பயிற்சிகளை செய்வதற்கு முன், காலை கடன்களை கண்டிப்பாக முடித்திருக்க வேண்டும்
* 'யோகா மேட்'டில் அமர்ந்து பயிற்சி செய்ய வேண்டும். அப்படி இல்லையென்றால், சுத்தமான விரிப்புகள், ஜமுக்காளம் போன்றவற்றை தரையில் விரித்து, அதன் மேல் பயிற்சிகளை செய்ய வேண்டும்
* தளர்வான மேலாடைகளை அணிந்து கொண்டால், பயிற்சிகளை செய்வதற்கு வசதியாக இருக்கும். மேலும், உள்ளாடைகள் சரியான அளவு இறுக்கத்துடன் இருப்பது அவசியம்
* இப்பயிற்சிகளை வேகமாக செய்யக்கூடாது. உடல் சோர்வாக இருக்கும்போது, யோகா செய்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்
*மாதவிடாய் மற்றும் மகப்பேறு காலங்களில், பெண்கள் பயிற்சிகளை செய்வதற்கு முன், யோகா மருத்துவரின் ஆலோசனைகளை கேட்டு, செய்வது நல்லது.
பயிற்சிக்கு பின் செய்ய வேண்டியவை:
* யோகா பயிற்சி முடித்து, அரை மணி நேரத்துக்கு பிறகு தான் குளிக்க வேண்டும்
* பயிற்சி முடித்த அரை மணி நேரத்திற்கு பிறகே உணவு உண்பதும், குடிநீர் அருந்துவதும் நல்லது.
யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள்:
* ரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோய், சுவாச கோளாறு மற்றும் உடல் பருமன் போன்ற நோய்களுக்கு தீர்வு காண உதவுகிறது
* மன அழுத்தம், மனச்சோர்வு, கவலை, பதற்றம் குறைக்கிறது
* பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் மற்றும் ஹார்மோன் பிரச்னைகளுக்கு தீர்வு காண, துணை புரிகிறது.
தொகுப்பு: ஏ.எஸ்.கோவிந்தராஜன்