PUBLISHED ON : ஆக 01, 2021

இளமை தரும் அமிர்தம் என்று சொன்னால், நெல்லிக்கனியை தான் சொல்வோம். நெல்லிக்கனியால் மனித சமூகத்துக்கு ஏராளமான நன்மை ஏற்படுகிறது.
நெல்லிக்காயை தேனுடன் சேர்த்து, தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், நிறைய நன்மைகள் கிடைக்கும். அவை:
* உடலில் தேங்கியுள்ள சளி அனைத்தும் வெளியேறி விடும்; தொண்டைப் புண்ணும் குணமாகும்
* ரத்த சோகை உள்ளவர்கள், தினமும் ஒன்று வீதம், சாப்பிட்டு வந்தால், ரத்தம் சுத்தமாவதோடு, சிவப்பு ரத்தணுக்களின் அளவும் அதிகரிக்கும்
* முடி கொட்டும் பிரச்னை தடுக்கப்பட்டு, முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்
* இதயத்தில் உள்ள தசைகள் வலிமையடைந்து, இதய நோய் வருவதை தடுக்கிறது
* முகப்பொலிவு அதிகரித்து, சருமம் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்
* கண்களில் ஏற்படும் எரிச்சல், நீர் வடிதல் மற்றும் சிவப்பாதல் போன்றவை குணமாகும்
* செரிமான பிரச்னை மற்றும் பசியின்மையை சரி செய்கிறது
* சிறுநீர் மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகள் தடுக்கப்படுவதோடு, முழுவதுமாக குணமாகி விடும்.
தொகுப்பு: ஏ.எஸ்.கோவிந்தராஜன்
