தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நம்மிடமே இருக்கு மருந்து! - சீதாப்பழம்

நம்மிடமே இருக்கு மருந்து! - சீதாப்பழம்

நம்மிடமே இருக்கு மருந்து! - சீதாப்பழம்


PUBLISHED ON : பிப் 02, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 02, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மித வெப்பமான பகுதிகளில் விளையும், ஓர் அற்புதமான பழம், சீதாப் பழம். இதில், இரும்பு சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், தாமிரம், வைட்டமின், 'ஏ, சி' மற்றும் புரதம், தாது உப்புகள், நார்ச்சத்துகள் அதிகமாக இருப்பதுடன், இனிப்பு சுவையுடன் இருக்கும்.

ரத்த விருத்திக்கும், ரத்த சோகைக்கும் நல்ல மருந்து. இதய நோய் வராமல் தடுக்க உதவும். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு துணை புரியும். இதிலுள்ள வைட்டமின், 'ஏ' சத்து, கண் பார்வைக்கும், முடி வளர்ச்சியை துாண்டுவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

சளித் தொல்லையை போக்கும். பற்களை வலுப்படுத்தும். சோர்வுடன் இருக்கும் குழந்தைகளுக்கு, சீதா பழத்தை தினமும் கொடுக்கலாம். நல்ல புத்துணர்ச்சி கிடைக்கும்.

இதில் உள்ள தாமிர சத்து, குடலுக்கு மிகவும் நல்லது. காலையில், வெறும் வயிற்றில் தொடர்ந்து ஒரு சீதாப் பழம் சாப்பிட்டு வர, அமிலத் தன்மையை சரி செய்யும். வயிற்றில் புண்கள் வராமல் தடுக்கும்.

மூட்டுகளில் உண்டாகும் அமிலங்களை வெளியேற்றுவதால், வாத நோய், மூட்டு வலி, கீல் வாத நோய்களை போக்கும். சீதாப் பழத்தை, கர்ப்பிணிகள் சாப்பிட்டு வந்தால், உடல் வலிமையாவதுடன், பிறக்கும் குழந்தையின் வளர்ச்சியும், நல்ல நிலையில் இருக்கும். சருமத்தை அழகாக்கும்; தோலுக்கும், முகத்துக்கும் பளபளப்பை கொடுக்கும்.

உடலுக்கு குளிர்ச்சியை தரும். இதில் உள்ள மெக்னீசியம், உடலில் நீர்ச் சத்தை தக்க வைக்கும். பக்கவாதம், மாரடைப்பு, புற்றுநோய் எதிர்ப்பு செயல்களில், சீதாப் பழத்தின் பங்கு அதிகம்.

சீதாப் பழத்தை சாப்பிட்ட பின், தோல் மற்றும் விதைகளை அரைத்து, பாசிப் பருப்பு மாவில் கலந்து தலையில் தேய்த்து வந்தால், பேன், பொடுகு நீங்கும்; முடி மிருதுவாகும்.

பற்சிதைவு, ஈறுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலிகளுக்கு இப்பழத்தின் தோல் நிவாரணி. மலச்சிக்கலை கட்டுப்படுத்தும். இந்த மரத்தின் பட்டைகள், நீரிழிவு கோளாறுக்கும், இலைகள், நோய் தடுப்புக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.

பா. கவிதா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us