PUBLISHED ON : மார் 27, 2022

துளசியில் அடங்கியிருக்கும் மருத்துவ குணங்களை கருத்தில் கொண்டு தான், அதை, தெய்வீகமாக கருதி, வழிபட்டு வந்துள்ளனர், நம் முன்னோர்.
ராம துளசி, கிருஷ்ண துளசி என்று, பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. துளசியில் நற்துளசி, கருந்துளசி, செந்துளசி, நிலத்துளசி, கல் துளசி, நாய்த்துளசி, முள் துளசி என பல வகை உண்டு.
நற்துளசி: கபம், தாகம் மற்றும் சுவையின்மையை போக்கும். வயிற்று வலி குணமாகும். மந்தத்தை நீக்கும்.
நாய்த்துளசி: கபம், இருமல், சளி, ஜன்னி போன்றவற்றை போக்கவல்லது.
நிலத்துளசி: தாய்ப் பாலால் குழந்தைகளுக்கு வரும் மந்தத்தை போக்கும். கனச்சூடு நீக்கும். கப ஜுரம், பித்த ஜுரம், குளிர் ஜுரத்தை போக்கவல்லது.
கல் துளசி: கட்டி, வண்டுக்கடி, பூச்சிக்கடி போக்கும்.
முள் துளசி: வெட்டுப் புண், கபம் போன்றவற்றுக்கு சிறந்த மருந்து.
செந்துளசி: விஷத்தை முறிக்கும். கபம், சைனசை போக்கவல்லது.
கருந்துளசி: இருமல், இழைப்பு மற்றும் மார்பு சளி குணமாகும். செருமல், வயிற்றுப்புழு நீங்கும்.
