sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

நம்மிடமே இருக்கு மருந்து! - வெள்ளைப் பூசணி!

/

நம்மிடமே இருக்கு மருந்து! - வெள்ளைப் பூசணி!

நம்மிடமே இருக்கு மருந்து! - வெள்ளைப் பூசணி!

நம்மிடமே இருக்கு மருந்து! - வெள்ளைப் பூசணி!


PUBLISHED ON : செப் 11, 2022

Google News

PUBLISHED ON : செப் 11, 2022


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெள்ளைப் பூசணியில் வைட்டமின் பி, சி, கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. முக்கியமாக இதில், நீர்ச்சத்து அதிகம் உள்ளது

* 'அல்சர்' பிரச்னையால் அவதிப்படுவோருக்கு, வெள்ளைப் பூசணி சாறு உடனடி பலனைத் தரும். அதுமட்டுமின்றி, அதிக காரமான உணவுகள் மற்றும் நீண்ட நேரம் உணவு உட்கொள்ளாமல் இருந்தால் ஏற்படும், 'அசிடிட்டி' பிரச்னையை எதிர்த்து போராடவும் வெள்ளைப் பூசணி சாறு உதவும்

* தினமும் காலையில் வெள்ளைப் பூசணி சாறுடன், தேன் கலந்து குடித்து வந்தால், வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேற்றப்பட்டு, தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்

* வெள்ளைப் பூசணி சாறை தினமும் காலையில் குடித்து வந்தால், எடை குறைவதோடு, உடலில் உள்ள கெட்ட நீரையும் வெளியேற்றி விடும்; உடல் சூடு தணியும். அதுமட்டுமின்றி, உடலில் நீர்ச்சத்து அதிகரித்து, உடல் குளிர்ச்சியுடன் இருக்கும்

* வெள்ளைப் பூசணி சாறில் தேன் கலந்து, தினமும் காலை - மாலை என, இருவேளை குடித்து வந்தால், ரத்தம் சுத்தமாகும்

* சிறுநீருடன் ரத்தம் வெளிவருவது, 'அல்சரால்' உடலினுள் ரத்தக் கசிவு ஏற்படுவது, 'பைல்ஸ்' போன்றவற்றால் ஏற்படும் ரத்தக்கசிவுக்கு வெள்ளைப் பூசணி சாறு நல்ல பலனைத் தரும்.

ஏ.எஸ்.ஜி.,






      Dinamalar
      Follow us