தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கீரை வகைகளை சமைக்கும்போது...

கீரை வகைகளை சமைக்கும்போது...

கீரை வகைகளை சமைக்கும்போது...


PUBLISHED ON : மார் 14, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 14, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* முருங்கைக்கீரை, அகத்திக்கீரையை வதக்கும்போது, கரண்டியின் காம்புப் பகுதியை வைத்துக் கிளறினால், கட்டியாக இல்லாமல் கீரை உதிரியாக இருக்கும்

* புதினாவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி அரைத்து, அதை தக்காளி சூப்புடன் சேர்த்தால் சுவையாகவும், வாசனையாகவும் இருக்கும்

* கீரை மசியல் செய்யும்போது புளிக்கு பதிலாக, பொடியாக அரிந்த மாங்காயைச் சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்

* கொத்துமல்லித் தழையை, பச்சையாகவே துவையல் அரைக்கும்போது, புளி சேர்ப்பதற்குப் பதிலாக, ஒரு துண்டு மாங்காயை சேர்த்து அரைத்தால், சுவையும், மணமும் அதிகமாகும்

* கறிவேப்பிலையையும் கொத்தமல்லியையும் வதக்கக் கூடாது. பச்சையாக உணவில் சேர்த்தால் தான், சத்து அதிகமாக இருக்கும்

* கறிவேப்பிலையை நிழலில் உலர்த்தி, மிளகு, உப்பு, சீரகம், சுக்கு போன்றவற்றையும் சேர்த்து பொடியாக்கி வைத்து, குழம்பு, ரசம் ஆகியவற்றில் போட்டு சாப்பிடலாம்; சுவையாக இருக்கும்.

தொகுப்பு: ஏ.எஸ்.கோவிந்தராஜன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us