PUBLISHED ON : செப் 03, 2023

* சீடை மாவை பிசைந்து சிறிது நேரம் வைக்கவும். அதன்பின், ஒரு துணியில் சீடையை உருட்டி போடவும். ஒரு மணி நேரத்தில், துணி, ஈரத்தை இழுத்துக் கொள்ளும். பிறகு சீடையை பொரித்தால், சீடை வெடிக்காமல் இருக்கும்.
* சீடை, முறுக்குக்கு தேவையான அரிசியை அரை மணி நேரம் வெந்நீரில் ஊற வைத்து வடித்த பின், மாவாக அரைக்கலாம். சீடை, முறுக்கு சிவக்காமல் இருக்கும்.
* வெல்லச் சீடை செய்யும்போது, சிறிது நறுக்கிய பேரீச்சம்பழத் துண்டுகளை மசித்து, கொதிக்கும் பாகில் சேர்த்து செய்தால், மெத்தென்று மாறுபட்ட சுவையுடன் இருக்கும்.
* தட்டை செய்யும்போது, கடலை பருப்பை ஆறு மணி நேரம் ஊற வைத்து, நீரை வடிகட்டி, துணியில் போட்டு உலர விடவும். பிறகு மாவில் போட்டு பிசைந்து தட்டினால், பருப்பு புஸ்சென எண்ணெயில் பொரிந்து, தட்டை சூப்பராக இருக்கும்.
