/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
அமெரிக்கர்களுக்கு பிடித்த நாடு எது?
/
அமெரிக்கர்களுக்கு பிடித்த நாடு எது?
PUBLISHED ON : மார் 24, 2013

அமெரிக்காவைச் சேர்ந்த கலூப் என்ற நிறுவனம், 'அமெரிக்கர்களுக்கு மிகவும் பிடித்த நாடு எது?' என்ற ஆய்வை நடத்தியது. இதில், முதலிடம் பிடித்திருப்பது, கனடா. 92 சதவீதம் பேர், கனடாவை தங்களுக்கு பிடித்திருப்பதாக கூறியுள்ளனர்.
அமெரிக்கர்களின் விருப்ப பட்டியலில், பிரிட்டனுக்கு இரண்டாவது இடமும், ஜெர்மனிக்கு மூன்றாவது இடமும் கிடைத்துள்ளது. இந்தியாவுக்கு, ஆறாவது இடம் கிடைத்துள்ளது. 68 சதவீதம் அமெரிக்கர்கள், இந்தியாவை விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடான, இஸ்ரேலுக்கு, இந்த பட்டியலில் இந்தியாவுக்கு அடுத்ததாக, ஏழாவது இடம் தான் கிடைத்துள்ளது என்பது, ஆச்சரியமான விஷயம் தான். அதே நேரத்தில், அமெரிக்கர்கள், மிகவும் வெறுக்கும் நாடுகளில், நம் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு, மூன்றாவது இடம் கிடைத்துள்ளது. இதில், முதலிடத்தை பிடித்துள்ளது, ஈரான். இரண்டாவது இடம், வட கொரியாவுக்கு கிடைத்துள்ளது.
— ஜோல்னா பையன்.

