தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/யார் இந்த அபாய அழகி?

யார் இந்த அபாய அழகி?

யார் இந்த அபாய அழகி?


PUBLISHED ON : ஆக 12, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 12, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்த புகைப்படத்தை பார்த்தால், ஏதோ ஒரு கடற்கரையில், ஹாலிவுட் படப்பிடிப்பில் எடுக்கப்பட்டது போல் தோன்றும். யாரோ ஒரு நடிகை, பிகினி உடையில், முதுகில் துப்பாக்கியை அலட்சியமாக தொங்க விட்டபடி, தோன்றுவதாக நினைப்பீர்கள். ஆனால், இந்த பெண், நடிகை அல்ல. இஸ்ரேல் ராணுவத்தை சேர்ந்தவர். ராணுவ முகாமிலிருந்து, ஜாலியாக பொழுதை கழிப்பதற் காக, கடற்கரைக்கு, அந்த பெண் சென்றபோது, இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இணையதளத்தில் வெளியான இந்த புகைப்படம், உலகம் முழுவதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

'பணியில் இல்லாதபோது, அதுவும், கடற் கரையில் ஜாலியாக பொழுதை கழிக்கும் நேரத்தில், துப்பாக்கியை, அந்த பெண், கொண்டு சென்றது ஏன். முகாமிலேயே, துப்பாக்கியை வைத்துச் சென்றிருக்கலாமே...' என, இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், சமூக வலைத் தளங்களில் தங்களது அதிருப்தியை பதிவு செய்துள்ளனர். இஸ்ரேல் ராணுவமோ, இதுபற்றி சற்றும் அலட்டிக் கொள்ளவே இல்லை. 'டேக் இட் ஈஸி' என்கின்றனர், ராணுவ அதிகாரிகள்.

ஒரு போனஸ் தகவல். இஸ்ரேலை பொறுத்த வரை, அந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும், கட்டாயம் ராணுவ சேவையாற்ற வேண்டும். ஆண், பெண், பாகுபாடு இல்லை. பெண்கள், 18 வயதை அடைந்தவுடன், கட்டாயமாக, இரண்டு ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும். இஸ்ரேல் ராணுவத்தில் மொத்தம் உள்ள வீரர்களில், 33 சதவீதம் பேர் பெண்கள். ராணுவத்தில் அதிகாரிகள் அளவில் பணிபுரிவோரில், 51 சதவீதம் பெண்கள். இஸ்ரேல் ராணுவத்தின் அனைத்து பிரிவுகளிலும் பெண்கள் உள்ளனர்.

— ஜோல்னா பையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us