
கடந்த, 60 ஆண்டுகளாக, ஹிந்தி - தென்னக சினிமா நடிகர்களை சண்டை போட வைத்தவர், 'ஸ்டன்ட் மாஸ்டர்' தியாகராஜன். திருப்பத்துார், ஆம்பூரில், 10ம் வகுப்பு வரை படித்து விட்டு, சினிமா நடிகர் ஆகும் லட்சியத்துடன், சென்னை வந்தார்.
வசதியான, விவசாய குடும்பத்தில் பிறந்த இவர், கோடம்பாக்கம் தெருக்களில், குழாய் தண்ணீர் மட்டும் குடித்து, தடுமாறியபோது, இலவசமாக உணவளித்த, டீ கடை கிருஷ்ணன் நாயரை, இன்றும், நன்றியுடன் நினைத்து கும்பிடுகிறார். பி.யு.சின்னப்பா, எம்.ஜி.ஆர்., மற்றும் சிவாஜி போல, நடிகர் ஆக வேண்டும் என்பது லட்சியம். ஆனால், 'ஸ்டன்ட் மாஸ்டர்' ஆனார். தியாகராஜ பாகவதரின் ரசிகரும், நண்பருமாக இருந்தார், இவரது தந்தை, அக்கம் பக்கத்து ஊர்களில் எங்கு கச்சேரி இருந்தாலும், முதல் வரிசையில் உட்கார்ந்து ரசிப்பார். பாகவதர் மீது இருந்த பற்று காரணமாக, மகனுக்கு, தியாகராஜன் என்று பெயர் சூட்டினார்.
- ஜோல்னாபையன்.