PUBLISHED ON : டிச 04, 2016

அ நிறம் | அளவு
படத்தை பார்த்ததும், வாகனங்கள் திருட்டு போவதை தடுப்பதற்காகத் தான் சக்கரங்களில் சங்கிலிகள் சுற்றப்பட்டுள்ளது என நினைக்க வேண்டாம். பனி நிறைந்த சாலைகளில், சக்கரம் சறுக்காமல் இருப்பதற்காக தான், இந்த சங்கிலிகள் சுற்றப்பட்டுள்ளன.
கடல் மட்டத்தில் இருந்து, 14 ஆயிரத்து 270 அடி உயரத்தில் அமைந்துள்ள, இமாச்சல் பிரதேச சாலைகளில், வாகனம் ஓட்டுவது மிகவும் சிரமம். சிறிது கவனம் பிசகினாலும், பெரும் விபத்து ஏற்பட்டு விடும்.
பனியால் மூடப்பட்ட சாலைகளில், வாகனங்களுக்கு சறுக்கல் ஏற்படும். இதை தடுப்பதற்காகவே, இவ்வாறு, சக்கரங்களில் பெரிய சங்கிலிகள் சுற்றி வைத்துள்ளனர். இதன் மூலம், சறுக்கலில் இருந்து ஓரளவிற்கு பாதுகாத்து கொள்ள முடியும்.
— ஜோல்னாபையன்.
