PUBLISHED ON : நவ 17, 2013

மயானம் இருக்கும் பக்கம் போவதற்கே, நமக்கெல்லாம் பயமாக இருக்கும். ஆனால், பிரேசிலை சேர்ந்த, 47, வயதான பேபியோ ரிகோ, என்பவர், 13 ஆண்டுகளாக, எலும்புக் கூடுகளுடன் வசிக்கிறார் என்றால், ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா?
இவர், பிரேசிலில், முன்பு, கல்லறைத் தோட்டமாக இருந்த, ஒரு இடத்தில், சுரங்கம் தோண்டி, அதற்குள், 13 ஆண்டுகளாக வசித்து வருகிறார். இவருக்கு துணை யார் தெரியுமா? அந்த சுரங்கத்துக்குள் இருக்கும், ஆறு எலும்புக் கூடுகள் தான். இந்த எலும்புக் கூடுகளை தவிர, வேறு யாரையும், இவருக்கு தெரியாது. 'ஏன் இப்படி?' என, அவரிடம் கேட்டபோது, 'ஒரு காலத்தில், நானும், மற்றவர்களைப் போல், ஓஹோவென வாழ்ந்தவன் தான். ஆனால், தொழில் நஷ்டமாகி விட்டதால், குடும்பத்தினர், என்னை கைவிட்டு விட்டனர். இதனால், தனிமையை நாடி, இங்கு, அடைக்கலமாகி விட்டேன்...' என, தன், பிளாஷ்பேக்கை சொல்கிறார்.
-- ஜோல்னா பையன்.

