PUBLISHED ON : ஜூலை 13, 2014

அ நிறம் | அளவு
கரப்பான் பூச்சியை பார்த்தாலே, பல பெண்கள் பயந்து நடுங்குவர். ஆனால், சீனாவின் கிழக்கு பியூஜியான் மாகாணத்தில் வசிக்கும் யுவான் மெக்சியா என்ற இளம் பெண், கரப்பான் பூச்சிகளுடன் தான், வாழ்க்கையே நடத்துகிறார்.
ஒரு லட்சம் கரப்பான் பூச்சிகளை, தன் வீடு முழுவதும் வளர்க்கிறார். இந்த கரப்பான் பூச்சிகளை இவர் வளர்ப்பது, பொழுது போக்கிற்காகவோ, சேவை நோக்கத்துடனோ அல்ல; பிசினஸ் நோக்கத்துடன்.
ஆம், சீனாவில் கரப்பான் பூச்சிகளிலிருந்து ஒரு வகை மருந்து தயாரிக்கின்றனர். இதற்காகத் தான், இவர், கரப்பான் பூச்சிகளை வளர்த்து, அவை நன்றாக வளர்ந்ததும், அவற்றை தண்ணீரில் மூழ்கடித்து சாகடித்து, பின், காய வைத்து, பேக்கிங் செய்து, மருந்து தயாரிக்கும் கம்பெனிகளுக்கு விற்று விடுகிறார். ஒரு கிலோ கரப்பான் பூச்சிகளின் விலை, 6,000 ரூபாய்!
— ஜோல்னாபையன்.
