PUBLISHED ON : மார் 04, 2018

அ நிறம் | அளவு
கேரள மாநிலம், திருச்சானுார் போலீஸ் அகாடமியில், சப் - இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார், என்.ஏ.வினயா. இவர், 'விங்ஸ்' என்ற அமைப்பை ஏற்படுத்தி, அநீதியை எதிர்த்து தன்னம்பிக்கையுடன் பெண்கள், போராட வேண்டும் என, பெண்களுக்கு ஊக்கமளித்து வருகிறார். கேரளாவில், 24 வயது பெண், ரயிலில் பயணித்த போது, அப்பெண்ணை, கோவிந்தசாமி என்ற கிரிமினல், கற்பழித்து கொலை செய்த சம்பவம் தான், வினயாவை இப்படி ஒரு அமைப்பை ஏற்படுத்த துாண்டியதாக கூறுகிறார்.
மேலும், ஆண்களுக்கு இணையாக பெண்களாலும் செயல்பட முடியும் என்பதை நிரூபிக்கும் விதமாக, ஓணம் பண்டிகையின் போது நடைபெறும், 'புலிகளி' என்ற புலியாட்டத்தில், தானும் கலந்து கொண்டதோடு, மற்ற பெண்களையும் இந்த ஆட்டத்திற்கு வரவழைத்துள்ளார்.
— ஜோல்னாபையன்.
