
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மீண்டும் நடிக்க வந்துள்ள மஞ்சு வாரியருடன் புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துள்ள இவர்கள், கார் ஓட்டுனர்கள். கேரளா வில் அரசு உதவி பெறும்,'குடும்பஸ்ரீ' என்ற அமைப்பு, பெண்களின் பொருளாதார முன்னேற்றத்துக்காக இயங்கி வருகிறது. இந்த அமைப்பைச் சேர்ந்த இவர்கள்,
'ஷி டாக்சி' என்ற பெயரில் வாடகை கார்களை ஓட்டி வருகின்றனர். திருவனந்தபுரத்தில், 14 கார்களுடன் ஆரம்பித்த, 'ஷி டாக்சி' இன்று, மற்ற மாவட்டங்களிலும் செயல்படத் துவங்கியுள்ளது. திருவனந்தபுரத்தை அடுத்து எர்ணாகுளம் மற்றும் கோழிக்கோட்டிலும், 'ஷி டாக்சி'கள் ஓடத் துவங்கின. வேலை இல்லை என்று புலம்பும் படித்த பெண்கள், இந்த துணிச்சல் மிக்க பெண்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்!
— ஜோல்னாபையன்.

