
தென் அமெரிக்காவில் உள்ள, ஈக்வடார் நாட்டிற்கு சொந்தமான தீவு, கலபாகோஸ்! ஈக்வடார் நாட்டின் தலைநகர் குவைட்டோவில் இருந்து, 965 கி.மீ., துாரத்தில், இந்த தீவு உள்ளது. இது, ஒரு அபூர்வ தீவு. உலகின் மற்ற பகுதிகளில் காண இயலாத அபூர்வ மிருகங்கள், பறவைகள், தாவரங்கள் மற்றும் பூச்சிகளை இங்கு காணலாம்.
பிரபல விஞ்ஞானி, சார்லஸ் டார்வின், இந்த தீவில் ஆராய்ச்சி செய்து தான், பரிணாம வளர்ச்சி சார்ந்த, தன் முடிவை அறிவித்தார்.
இந்த தீவின், 97.5 சதவீதம், தேசிய பூங்காவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. யூனெஸ்கோவின் மதிப்புமிக்க பாரம்பரிய இடமாக கருதப்படுகிறது.
இவற்றையெல்லாம் விட சிறப்பு, ஆமைகள் தான். இவை, 100 ஆண்டுகளுக்கு மேல் வாழ்கின்றன. இதில், 110 வயதை கடந்த ஆமை ஒன்று, இங்குள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஒரு காலத்தில், ஆமைகள் லட்சக்கணக்கில் இருந்தன. ஆனால், ஓடு மற்றும் சதைக்காக அவை கொல்லப்பட்டன. கடுமையான சட்டம் இயற்றிய பின், பாதுகாக்கப்பட்ட மிருகமாக அறிவிக்கப்படடு, ஆமைகளின் எண்ணிக்கை, இன்று, 19 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
— ஜோல்னாபையன்.

