PUBLISHED ON : நவ 12, 2017

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மருத்துவமனை என்ற பெயரைக் கேட்டாலே, நம் முகத்தில், சோகம் குடியேறி விடும். அதிலும், மருத்துவமனையில் உள் நோயாளியாக தொடர்ந்து சிகிச்சை பெறுவோரது நிலையை கேட்கவே வேண்டாம்.
இதற்கு மாறாக, சீன தலைநகர் பீஜிங்கில் உள்ள ஒரு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வரும், பாய் சுபாங் என்ற பெண் டாக்டர், பாரம்பரிய உடையணிந்து, அழகாக மருத்துவமனைக்கு வருகிறார்.
இவரது அழகான தோற்றம், கனிவான பேச்சுடன் கூடிய சிகிச்சை பலருக்கும் பிடித்துப் போகவே, இப்போது, அவரிடம் சிகிச்சை பெறுவற்கு, ஏராளமானோர், குவிகின்றனர்.
— ஜோல்னாபையன்.

