PUBLISHED ON : மார் 11, 2012

பீகார் மாநிலத்தில், பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, ஜனவரி, பிப்ரவரி மாதங்களில், தயிர் சாப்பிடும் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. நம்ம ஊரில் பொங்கல் பண்டிகையின்போது, ஜல்லிக்கட்டு நடத்துவது போல், அங்கு இந்த போட்டி நடத்தப்படுகிறது. சில இடையூறு களால், கடந்த சில ஆண்டுகளாக போட்டி நடக்கவில்லை.
இந்தாண்டு, போட்டியை எப்படியும் நடத்திவிட வேண்டும் என்ற எண்ணத்தில், பாட்னாவில் உள்ள ஒரு கல்லூரி நிர்வாகம், கடும் முயற்சி மேற்கொண்டது. இதன்படி, கல்லூரியில் உள்ள மாணவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்களை போட்டியாளர்களாக வைத்து, போட்டி நடத்தப் பட்டது. இதில், 300 பேர் பங்கேற்றனர்.
இறுதியாக, அஜய் குமார் என்ற கணிதவியல் துறை பேராசிரியர், 15 நிமிடங்களில், மூன்று கிலோ தயிரை சாப்பிட்டு, வெற்றி கோப்பை யைத் தட்டிச் சென்றார். கல்லூரி நூலகர் ப்ரீத்தா ஷா, இரண்டரை கிலோ தயிர் சாப்பிட்டு, இரண்டாவது பரிசைப் பெற்றார். இந்த நிகழ்ச்சிக்கு பின், கல்லூரியில், அஜய் குமாரை, 'தயிர் வண்டி பேராசிரியர்' என்று தான், செல்ல பெயரிட்டு அழைக்கின்றனர்.
— ஜோல்னா பையன்.
