PUBLISHED ON : மார் 06, 2022

அ நிறம் | அளவு
பிரபலமான, 'பாஸ்ட் புட்' நிறுவனமான, 'மெக்டொனால்டு' நம் அண்டை நாடான சீனாவின், ஷாங்காய் உள்ளிட்ட மாகாணங்களில் ஒரு வித்தியாசமான திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த நிறுவனத்தின் கடைகளில் வாடிக்கையாளர்கள் அமரும் இருக்கைகளுக்கு பதிலாக, உடற்பயிற்சி செய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள நவீன சைக்கிள்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
'வாடிக்கையாளர்கள் இந்த சைக்கிளில் அமர்ந்தபடி உணவை, 'ஆர்டர்' செய்யலாம். உணவை ருசித்து சாப்பிட்டபடியே அந்த சைக்கிகளில் உள்ள, 'பெடல்'களை சுற்றலாம். இதனால் உடம்பில் உள்ள, 'கலோரி' குறையும்...' என்கிறது, 'மெக்டொனால்டு' நிறுவனம்.
அங்கு சாப்பிடும் உணவால், உடல் எடை அதிகரிக்காதாம்; இது எப்படி இருக்கு!
— ஜோல்னாபையன்
