PUBLISHED ON : ஆக 07, 2016

அ நிறம் | அளவு
சீனாவில் உள்ள ஜிலின் என்ற நகரத்தை சேர்ந்தவர், காங் யங்; 54 வயதாகும் இவரது எடை, மூன்று ஆண்டுகளுக்கு முன் 115 கிலோவாக இருந்தது.
தன் உடல் எடையை குறைப்பதற்காக, வித்தியாசமான முறையில், 40 கிலோ எடையுள்ள பெரிய பாறையை தன் தலையில் தூக்கி வைத்தபடி தினமும் நடைபயிற்சி மேற்கொண்டார். இந்த புது விதமான முயற்சியில், கடந்த மூன்று ஆண்டுகளில், 30 கிலோ வரை, தன் எடையை குறைத்துள்ளார். தொடர்ந்து எடையை குறைக்க இதே முறையை பின் பற்றி வருகிறார்.
— ஜோல்னாபையன்.
