sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வேலை வாய்ப்பு மலர்

/

ராஜ்யசபாவில் 115 பணியிடங்கள்

/

ராஜ்யசபாவில் 115 பணியிடங்கள்

ராஜ்யசபாவில் 115 பணியிடங்கள்

ராஜ்யசபாவில் 115 பணியிடங்கள்


PUBLISHED ON : ஆக 08, 2017

Google News

PUBLISHED ON : ஆக 08, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்தியா பார்லிமென்ட்டின் இரு சபைகளில் ஒன்றான ராஜ்யசபாவில் பணியாற்ற வாய்ப்பு உருவாகியுள்ளது. இங்கு காலியாக உள்ள 115 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடங்கள்: பார்லிமென்டரி இன்டர்பிரிட்டரில் 2, அசிஸ்டன்ட் எக்ஸ்கியூட்டிவ் ஆபிசர் பிரிவில் 20ம், ஸ்டெனோகிராபர் 11ம், செக்யூரிட்டி அசிஸ்டன்ட் 21ம், செக்ரட்ரியட் அசிஸ்டன்ட் 39ம், மொழிபெயர்ப்பாளர் ௧9ம், பிழை திருத்துபவர் 3ம் என மொத்தம் 115 இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறன.

கல்வித்தகுதி: அனைத்து பதவிகளுக்கும் பட்டப்படிப்பு அவசியம். இது தவிர ஒவ்வொரு பதவிக்கும் கூடுதல் தகுதியும் தேவைப்படுகிறது.

வயது: பார்லிமென்ட்ரி இன்டர்பிரீட்டர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் பிழை திருத்துபவர் ஆகிய 3 பதவிகளுக்கு 18 - 35 வயதுக்குள் இருக்க வேண்டும். மற்ற பதவிகளுக்கு 18 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு உரிய வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் டெஸ்ட், நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

தேர்வு மையங்கள்: தமிழகத்தில் சென்னை மற்றும் மதுரை ஆகிய 2 இடங்களில் மட்டும் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியான நபர்கள் www.rajyasabha.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக்கட்டணம் 300 ரூபாய். எஸ்.சி/ எஸ்.டி., மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக்கட்டணம் கிடையாது. கடைசி நாள் : 2017 ஆக., 18

விபரங்களுக்கு: www.rajyasabha.nic.in






      Dinamalar
      Follow us