/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
தமிழக அரசில் 1,325 சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள்
/
தமிழக அரசில் 1,325 சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள்
PUBLISHED ON : ஆக 01, 2017

தமிழகத்தில் உள்ள
அரசுப் பள்ளிகளில் ஏற்படும் காலியிடங்களை ஆசிரியர் தேர்வாணையம்
(டி.ஆர்.பி.,) எழுத்துத் தேர்வுகளை நடத்தி அதன் மூலம் நிரப்பி வருகிறது.
தமிழக அரசு பள்ளிகளில், ஓவியம், தையல், இசை மற்றும் உடற்கல்வி என, நான்கு
படிப்புகளில், சிறப்பு பாட
ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இந்நிலையில்
பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள 1,325 சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை
நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம்
வெளியிட்டுள்ளது.
வயது தகுதி: 2017 ஜூலை 1 அடிப்படையில் 57 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
காலியிடங்கள் :
உடற்கல்வி ஆசிரியரில் 663, ஓவிய ஆசிரியரில் 327, இசை ஆசிரியரில் 86, தையல்
ஆசிரியரில் 249 என மொத்தம் 1,325 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
கல்வித்தகுதி : அனைத்து
பிரிவுகளுக்கும் அடிப்படை கல்வியாக பத்தாம் வகுப்பு முடித்திருக்க
வேண்டும். மேலும் விண்ணப்பிக்கும் பிரிவுகளில் சிறப்பு படிப்புகளை
முடித்திருக்க வேண்டும். முழுமையான தகவல்களை இணையதளத்தில் பார்த்து,
அதன்பின் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்கும் முறை :
www.trbonlineexams.in/spl என்ற இணையதளத்தில் ஆன்லைனில் மட்டுமே
விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணம் 500 ரூபாய். எஸ்.சி., / எஸ்.டி.,
மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 250 ரூபாய்.
தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு முறையில் தேர்ச்சி இருக்கும்.
விபரங்களுக்கு : www.trb.tn.nic.in
முக்கிய தேதிகள்:
விண்ணப்ப தேதி : 2017 ஜூலை 27 - ஆக., 18
எழுத்துத்தேர்வு தேதி :2017 செப்., 23

