/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
என்.ஐ.டி.,யில் 149 ஆசிரியர் வாய்ப்பு
/
என்.ஐ.டி.,யில் 149 ஆசிரியர் வாய்ப்பு
PUBLISHED ON : மே 16, 2017
ரீஜனல் இன்ஜினியரிங் காலேஜ் என்ற பெயரால் வழங்கப்பட்ட ஆர்.இ.சி., கல்வி நிறுவனம் பின் நாட்களில், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (என்.ஐ.டி.,) என்ற பெயர் மாற்றம் பெற்றது. தொழில்நுட்ப படிப்புகளில் பெயர் பெற்றது என்.ஐ.டி., கல்வி நிறுவனங்கள். இந்நிலையில் திருச்சி என்.ஐ.டி., கல்வி நிறுவனத்தில் ஆசிரியர் பிரிவுகளில் காலியாக உள்ள 149 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பிரிவுகள்: ஆர்க்கிடெக்சரில் 10, சிவில் இன்ஜினியரிங்கில் 15, கெமிக்கல் இன்ஜினியரிங்கில் 5, கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங்கில் 11, எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்கில் 12, எலக்ட்ரிகல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்கில் 14, இன்ஸ்ட்ரூமென்டேஷன் அண்டு கன்ட்ரோல் இன்ஜினியரிங்கில் 6, மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் 11, மெட்டலர்ஜிகல் அண்டு மெட்டீரியல்ஸ் இன்ஜினியரிங்கில் 8, புரொடக்சன் இன்ஜினியரிங்கில் 11, எனர்ஜி அண்டு என்விரான்மெண்டில் 2, இயற்பியலில் 6, வேதியியலில் 7, கணிதத்தில் 10, ஹியூமானிடிஸ் சார்ந்த ஆங்கிலம் மற்றும் பொருளாதாரத்தில் 7, கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் 8, நிர்வாகவியல் பிரிவில் 8ம் சேர்த்து மொத்தம் 149 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
கல்வித் தகுதி: விண்ணப்பிக்கும் பிரிவைப் பொறுத்து கல்வித்தகுதி மாறுபடுகிறது. எனவே சரியான தகவல்களை பெற இணையதளத்தை பார்க்கவும்.
ஊதியம் எப்படி? பி.எச்.டி., முடித்தவர்களுக்கு மாதம் ரூ.50 ஆயிரம், எம்.இ., எம்.டெக்., முடித்தவர்களுக்கு மாதம் ரூ.40 ஆயிரம், அறிவியல், ஹியூமானிடிஸ், நிர்வாகவியல் பிரிவுகளில் முதுநிலைப் படிப்பு முடித்தவர்களுக்கு பகுதி நேர ஊதியமாக மாதம் ரூ.25 ஆயிரம் பெறலாம்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் கிடைக்கும் பிரின்ட் அவுட்டுடன் உரிய இணைப்புகளைச் சேர்த்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். The Dean (Faculty Welfare), National Institute of Technology, Tiruchirappalli - 620015.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 2017 மே 22.
விபரங்களுக்கு : www.nitt.edu/home/other/jobs/TF-2017.pdf

