sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வேலை வாய்ப்பு மலர்

/

1,953 தமிழக அரசில் காலியிடங்கள்

/

1,953 தமிழக அரசில் காலியிடங்கள்

1,953 தமிழக அரசில் காலியிடங்கள்

1,953 தமிழக அரசில் காலியிடங்கள்


PUBLISHED ON : மே 02, 2017

Google News

PUBLISHED ON : மே 02, 2017


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களை பொது எழுத்துத் தேர்வு மூலம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ( டி.என்.பி.எஸ்.சி., ) பல ஆண்டுகளாக செய்து வருகிறது. இந்நிலையில் பட்டதாரி தகுதிக்கான பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 1,953 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

பிரிவுகள்: தலைமை செயலகத்தில் பெர்சனல் கிளார்க்கில் 6, டி.என்.பி.எஸ்.சி.,யில் 1, சட்டசபையில் ஸ்டெனோ டைப்பிஸ்ட் 6, இன்டஸ்ட்ரீஸ் அண்டு காமர்ஸ் துறையில் உதவியாளர் பிரிவில் 130, வருவாய் நிர்வாகம் துறையில் உதவியாளர் பிரிவில் 6, கருவூலம் மற்றும் அக்கவுண்ட்ஸ் துறையில் அக்கவுன்டன்டில் 85, சிறைத்துறை உதவியாளர் பிரிவில் 20, பதிவுத் துறை சார்ந்த உதவியாளரில் 128, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில் உதவியாளரில் 2, மீன்வளத்துறையில் உதவியாளர் பிரிவில் 18, தொழிலாளர் நலத்துறை உதவியாளரில் 24, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி பிரிவில் 82, எச்.ஆர்., அண்டு சி.இ., பிரிவில் உதவியாளர்கள் 18, என்.சி.சி., பிரிவில் 23 உதவியாளர்கள், விஜிலென்ஸ் மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையில் 2 உதவியாளர்கள், ஸ்டேஷனரி அண்டு பிரிண்டிங் துறையில் 54 உதவியாளர்கள், வணிகவரி துறை கமிஷனர் பதவியில் 22, மேலும் அத்துறையின் சென்னை(தெற்கு) மண்டலத்தில் 56, திருச்சியில் 27, வேலூரில் 9, கோவையில் 12, மதுரையில் 35, திருநெல்வேலியில் 20, தமிழக அமைச்சகம் சார்ந்த சட்டம் தவிர்த்த பிரிவுகளில் 30 உதவியாளர்கள், சட்டம் தொடர்புடைய பிரிவில் 8 உதவியாளர்கள், நிதித்துறையில் 15 உதவியாளர்கள், சட்டசபையில் 15 உதவியாளர்கள், இதே இடத்தில் லோயர் டிவிஷன் கிளார்க் பிரிவில் 12, தமிழ் நாடு பாட நூல் நிறுவனம் சார்ந்த உதவியாளரில் 8 இடங்கள் சேர்த்து மொத்தம் 1,148 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இது தவிர கூடுதலாக பல்வேறு துறைகளில் 805 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு ஒப்புதல் பெற வேண்டியுள்ளது என டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.

வயது: 01.07.2017 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், எஸ்.சி., / எஸ்.டி., உள்ளிட்ட பிரிவினர்களுக்கு அதிகபட்ச வயது நிர்ணயம் இல்லை.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். சில பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கு அத்துறை தொடர்புடைய பிரிவில் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். முழுமையான விபரங்களை அறிய இணையதளத்தைப் பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் http://tnpscexams.net/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக் கட்டணம் 100 ரூபாய். இதனை ஆன்லைன் மற்றும் வங்கி சலான் மூலம் செலுத்த வேண்டும்.

தேர்ச்சி முறை: 300 மதிப்பெண்களுக்கு பொது எழுத்துத்தேர்வு நடைபெறும். இதில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும். நேர்முகத்தேர்வு கிடையாது.

தேர்வு மையங்கள்: இத்தேர்வு தமிழகத்தின் பல்வேறு மையங்களிலும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 2017 மே 26.

விபரங்களுக்கு: www.tnpsc.gov.in






      Dinamalar
      Follow us