/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
322 சென்னை குடிநீர் வாரியத்தில் காலியிடங்கள்
/
322 சென்னை குடிநீர் வாரியத்தில் காலியிடங்கள்
PUBLISHED ON : பிப் 28, 2017

சென்னையிலுள்ள மக்களின் நீர் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் சென்னை மெட்ரோபாலிடன் வாட்டர் சப்ளை அண்டு சூவேஜ் போர்டு தலையாய பணிகளைச் செய்து வருகிறது. இந்த அமைப்பில் காலியாக உள்ள நான்குவிதமான இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: டெபுடி கன்ட்ரோலர் ஆப் பைனான்ஸ் பிரிவில் 6ம், சீனியர் அக்கவுன்ட்ஸ் ஆபிசர் பிரிவில் 3ம், சிவில்/மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் பிரிவுகளில் முறையே 113 மற்றும் 45ம், ஜூனியர் அசிஸ்டென்ட் பிரிவில் 155ம் காலியிடங்கள் உள்ளன.
வயது: விண்ணப்பதாரர்கள் 01.07.2017 அடிப்படையில் 18 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். பி.சி., பி.சி.எம்., எம்.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., ஆகிய பிரிவினருக்கு உச்ச பட்ச வயதில் சில சலுகைகள் உள்ளன. அவற்றை அறிய இணையதளத்தைப் பார்க்கவும்.
கல்வித் தகுதி: இந்த நிறுவனத்தின் இணையதளத்தைப் பார்த்து அறியவும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். கட்டணம் 500 ரூபாய்.
கடைசி நாள்: 2017 மார்ச் 6.
இணையதள முகவரி: www.chennaimetrowater.gov.in