/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
ஏர் இந்தியா நிறுவனத்தில் 400 பணியிடங்கள்
/
ஏர் இந்தியா நிறுவனத்தில் 400 பணியிடங்கள்
PUBLISHED ON : ஜூலை 18, 2017

இந்தியாவிலுள்ள விமான சேவை நிறுவனங்களுள் ஏர் இந்தியா நிறுவனத்திற்கென்று தனி முத்திரை உள்ளது. தற்சமயம் பல்வேறு விமான சேவை நிறுவனங்கள் இருந்தாலும் ஏர் இந்தியா நிறுவனத்தின் ட்ரீம்லைனர் சேவைக்கென்று தனி புகழ் உள்ளது. பெருமைக்குரிய இந்த விமான சேவை நிறுவனத்தில் பெண்களுக்கான 'கேபின் க்ரூ' பிரிவிலான பணியிடங்கள் 400ஐ நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிட விபரம் : இந்த பணியிடங்கள் அனுபவம் வாய்ந்த கேபின் க்ரூ மற்றும் டிரெய்னி கேபின் க்ரூ என்ற இரண்டு பிரிவுகளாக நிரப்பப்பட உள்ளன.
வயது : விண்ணப்பதாரர்கள் 18 - 27 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பு
அல்லது பிளஸ் 2 படிப்புக்குப் பின், ஓட்டல் மேனேஜ் மென்ட் அல்லது கேட்டரிங் டெக்னாலஜி அல்லது டிராவல் அண்டு டூரிசம் பிரிவில் டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.
இதர தேவைகள்: உயரம் குறைந்த பட்சம் 160 செ.மி.,யும், 18 முதல் 22க்கான பி.எம்.ஐ.,யும் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் 1,000 ரூபாய். இதனை AIR INDIA LIMITED என்ற பெயரில் டி.டி.,யாக புது டில்லியில் மாற்றத்தக்கதாக எடுத்து அனுப்ப வேண்டும்.
விபரங்களுக்கு : www.airindia.com/careers.htm

