/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
எய்ம்ஸ் மருத்துவமனையில் 475 நர்ஸ் காலியிடங்கள்
/
எய்ம்ஸ் மருத்துவமனையில் 475 நர்ஸ் காலியிடங்கள்
PUBLISHED ON : ஜூலை 11, 2017

எய்ம்ஸ் என அழைக்கப்படும் அகில இந்திய மருத்துவ அறிவியல் மையம் தலைநகர் புதுடில்லியை தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது. தலைசிறந்த மருத்துவ சேவைக்கு நாட்டிலேயே முன்னணியில் திகழ்கிறது. டில்லி தவிர போபால், புபனேஸ்வர், ஜோத்பூர், பாட்னா, ராய்ப்பூர் மற்றும் ரிஷிகேஷ் ஆகிய இடங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்படுகிறது. இந்நிலையில் சத்தீஸ்கரில் உள்ள ராய்ப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில் காலியாக உள்ள 475 நர்ஸ் பணியிடங்களுக்கு விண்ணணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள் : ஸ்டாப் நர்ஸ் ( கிரேடு 1) பிரிவில் 75 இடங்கள், ஸ்டாப் நர்ஸ் (கிரேடு 2) பிரிவில் 400 இடங்கள் என மொத்தம் 475 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
கல்வித்தகுதி: கிரேடு 1 பிரிவுக்கு விண்ணபிப்பவர்கள் நான்காண்டு பி.எஸ்சி., (நர்சிங்) படிப்பு முடித்திருக்க வேண்டும். இந்திய செவிலியர் கவுன்சில் அல்லது மாநில செவிலியர் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். நுாறு படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனையில் குறைந்தது 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
கிரேடு 1 பிரிவுக்கு விண்ணபிப்பவர்கள் நான்காண்டு பி.எஸ்சி., (நர்சிங்) படிப்பு முடித்திருக்க வேண்டும். இந்திய செவிலியர் கவுன்சில் அல்லது மாநில செவிலியர் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். கம்ப்யூட்டர் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். அலுவலக விண்ணப்பபம், ஸ்பிரட்ஷீட், பிரசென்டேஷன் ஆகியவை பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
வயது : கிரேடு 1 பிரிவுக்கு விண்ணபிப்பபவர்கள் 21 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். கிரேடு 1 பிரிவுக்கு விண்ணபிப்பபவர்கள் 21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: இரண்டு பதவிகளுக்கும் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். www.aiimsraipur.edu.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணம் 1000 ரூபாய். எஸ்.சி, எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.
தேர்ச்சி முறை : ஆன்லைன் எழுத்துத்தேர்வு , ஸ்கில் டெஸ்ட் அடிப்படையில் தேர்ச்சி நடைபெறும்.
கடைசிநாள் : 2017 ஜூலை 31
விபரங்களுக்கு : www.aiimsraipur.edu.in/upload/vacancies/594256a8059c3_Staff%20Nurse%20advt%20(1).pdf

