/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
'பெல்' நிறுவனத்தில் 770 காலியிடங்கள்
/
'பெல்' நிறுவனத்தில் 770 காலியிடங்கள்
PUBLISHED ON : ஏப் 11, 2017

தமிழகத்தின் திருச்சியில் பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் எனப்படும் பெல் நிறுவனம் அமைந்து உள்ளது. பொதுத்துறை சார்ந்த நிறுவனமான பெல் நிறுவனம் திருச்சிக்கு மட்டுமன்றி தமிழகத்திற்கே ஒரு முக்கிய அடையாளமாக உள்ளது. இந்த நிறுவனத்தில் டிரேடு அப்ரென்டிஸ் பிரிவில் காலியாக உள்ள 770 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுஉள்ளது.
பிரிவுகள்: பிட்டரில் 236ம், வெல்டரில் 191ம், டர்னரில் 30, மெஷினிஸ்டில் 31, எலக்ட்ரீசியனில் 63, வயர்மேனில் 30, எலக்ட்ரானிக் மெக்கானிக்கில் 30, இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக்கில் 23, ஏ.சி., அண்டு ரெப்ரிஜிரேஷனில் 20, மெக்கானிக்கல் டிராப்ட்ஸ்மேனில் 15, புரோகிராம் அண்டு சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேஷன் அசிஸ்டென்டில் 36, போர்ஜர் அண்டு ஹீட் ட்ரீட்டரில் 10, கார்பெண்டரில் 26, பிளம்பரில் 26, எம்.எல்.டி., பாதாலஜியில் 3ம் சேர்த்து மொத்தம் 770 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வயது: பெல் நிறுவனத்தின் மேற்கண்ட இடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.04.2017 அடிப்படையில் 18 முதல் 27 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று அதன் பின்னர் அரசு அங்கீகாரம் பெற்ற ஐ.டி.ஐ., படிப்பில் என்.சி.டி.வி.டி., வழங்கும் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும். முழுமையான தகவல்களை இணையதளத்திலிருந்து அறியவும்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மூலமாக தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்க: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்: 2017 ஏப்., 20.
விபரங்களுக்கு: www.bheltry.co.in

