PUBLISHED ON : ஜூன் 02, 2026

அ நிறம் | அளவு
மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் எல்லை சாலை அமைப்பில் (பி.ஆர்.ஓ.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் 300, ஆப்பரேட்டர் கம்யூனிகேசன் 261, ஆப்பரேட்டர் மிஷினரி 207, டிரேட்ஸ்மேன் 42, ஹிந்தி டைப்பிஸ்ட் 10, எலக்ட்ரீசியன் 79 என மொத்தம் 899 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / பிளஸ் 2 / ஐ.டி.ஐ.,
வயது: 18-27 (18.4.2026ன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 50. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 4.7.2026
விவரங்களுக்கு: bro.gov.in
