தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அலகாபாத் வங்கி பணிவாய்ப்பு

அலகாபாத் வங்கி பணிவாய்ப்பு

அலகாபாத் வங்கி பணிவாய்ப்பு


PUBLISHED ON : ஆக 20, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 20, 2012


Follow on Google
அ நிறம் | அளவு

ஐரோப்பாவைச் சார்ந்த சிலரால் 1865ல் அலகாபாத்தில் இந்தியாவின் ஜாயிண்ட் ஸ்டாக் கம்பெனியாகத்தான் அலகாபாத் வங்கி நிறுவப்பட்டது. இது இந்தியாவின் மிகப் பழமையான நிறுவனமாகும். இந்த வங்கி நிறுவப்பட்ட காலத்தில்தான் இந்தியாவில் முறைசார்ந்த தொழில் துறை, வணிகம் மற்றும் வங்கிகளுக்கான அடிப்படை துவங்கியது. 19ம் நூற்றாண்டு, 20ம் நூற்றாண்டு மற்றும் 21ம் நூற்றாண்டு என்று 3 நூற்றாண்டுகளைக் கண்ட இந்த வங்கிகள் பொதுத்துறைமயமாக்கலின் போது அரசுடைமையாக்கப்பட்டது. தற்போது இந்தியா முழுமையும் கிளைகளைக் கொண்ட அலகாபாத் வங்கி இந்தியாவின் முக்கிய வங்கிகளில் ஒன்றாகும். இந்த வங்கியில் சிங்கிள் விண்டோ ஆபரேட்டர் எனப்படும் கிளரிக்கல் காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.

காலி இடங்கள்:

அலகாபாத் வங்கியில் உள்ள 1100 கிளரிக்கல் பதவிகள் நாடு முழுமையும் மாநில வாரியாக நிரப்பப்பட உள்ளன. இவற்றில் தமிழகத்தில் 25 இடங்களும், கேரளாவில் 12 இடங்களும், கர்நாடகாவில் 30 இடங்களும், ஆந்திராவில் 55 இடங்களும் நிரப்பப்பட உள்ளன. இந்தக் காலி இடங்களுக்கு அரசு நிபந்தனைகளின்படி எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினருக்கு இட ஒதுக்கீடும் உள்ளது.

தேவைகள்:

அலகாபாத் வங்கியின் கிளரிக்கல் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.08.2011 அன்று 18 வயது நிரம்பியவராகவும், 28 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். ப்ளஸ் 2 விற்கு நிகரான படிப்பைக் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்தவர்களும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். கம்ப்யூட்டர் தொடர்புடைய திறனும் கட்டாயத் தேவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த மாநில காலி இடத்திற்கு விண்ணப்பிக்கிறோமோ அந்த மாநில ஆட்சி மொழியில் எழுத, பேச மற்றும் வாசிக்க தெரிந்திருக்க வேண்டும். மேற்கண்ட தகுதிகளுடன், கடந்த ஆண்டு ஐ.பீ.பி.எஸ்., அமைப்பு நடத்திய கிளரிக்கல் பிரிவு பொது எழுத்துத் தேர்வை எதிர்கொண்டு சில குறைந்த பட்ச நிபந்தனைகளுடன் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொதுப் பிரிவு, எஸ்.சி., எஸ்.டி.,ஓ.பி.சி., மற்றும் மா நில வாரியாக இந்த மதிப்பெண்கள் மாறுபடுவதால் முழுமையான விபரங்களை இந்த வங்கியின் இணைய தளத்திலிருந்து அறியவும்.

இதர தகவல்கள்:

சிங்கிள் விண்டோ ஆபரேட்டர் - பிரிவு ஏ விற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ரூ.100/-ஐ அலகாபாத் வங்கியின் 50114140153 என்ற அக்கவுண்ட் எண்ணில் கட்டணமாக செலுத்த வேண்டும். இதன் பின்னர் ஆன்-லைனில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த இணையதளத்திலிருந்து சலானை டவுண்லோடு செய்து பெற வேண்டும். சலானில் Allahabad Bank SWO-A என்ற பெயரில் கட்டணத்தை செலுத்த வேண்டும். முழுமையான தகவல்களை இந்த வங்கியின் இணையதளத்தைப் பார்த்து அறியவும்.

விண்ணப்பிக்க இறுதி நாள் :

23.08.2012

இணையதள முகவரி:

www.allahabadbank.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us