/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
வங்கியில் உதவியாளர் மற்றும் அதிகாரி வேலை
/
வங்கியில் உதவியாளர் மற்றும் அதிகாரி வேலை
PUBLISHED ON : ஆக 29, 2017

தனியார் துறை வங்கிகளில் முக்கியமானது பெடரல் வங்கி. இதன் தலைமையகம் கேரளாவின் கொச்சியில் உள்ள ஆலுவா என்ற இடத்தில் உள்ளது. நாடு முழுவதும் 1200க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டுள்ளது. இந்த வங்கியில் புரொபேஷனரி ஆபிசர் மற்றும் கிளரிக்கல் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
வயது வரம்பு: 2017 ஜூலை 1 அடிப்படையில் கிளரிக்கல் பதவிக்கு 24 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். புரொபேஷனரி பதவிக்கு 26 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பெடரல் வங்கியின் இந்த இரு பதவிகளுக்குமே அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில், ஏதாவது ஒரு பட்டப்படிப்பை 60 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: இந்த இரு பதவிகளுக்குமே எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற அடிப்படையில் தேர்ச்சி முறை இருக்கும்.
தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, நெல்லை ஆகிய மையங்களில் எழுத்துத் தேர்வு
நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்: பெடரல் வங்கியின் கிளரிகல் பதவிக்கு விண்ணப்பக்கட்டணம் 500 ரூபாய் (எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு 250 ரூபாய்). புரொபேஷனரி அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்கட்டணம் 750 ரூபாய் ( எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு 350 ரூபாய்).
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விரும்புவர்கள் ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
பயிற்சிக் காலம்: புரொபேஷனரி அதிகாரியாக சேருபவர்கள் குறைந்த பட்சம் 2 ஆண்டுகளும், கிளரிக்கல் பதவியில் சேருபவர்கள் 6 மாத காலமும் புரொபேஷன் அடிப்படையில் பணிபுரிய வேண்டும்.
கடைசி நாள்: 2017 செப். 4.
விபரங்களுக்கு : www.federalbank.co.in

