PUBLISHED ON : டிச 10, 2012

இந்தியாவிலுள்ள அணு மின் நிலையங்களில் பாபா அணு மின் நிலையம் எனப்படும் பி.ஏ.ஆர்.சி., நிறுவனம் அனைவராலும் அறியப்படுகிறது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த நிறுவனத்தின் மைசூரு கிளையின் சார்பாக பிரிவு 3ஐச் சார்ந்த கெமிக்கல் பிளான்ட் ஆபரேட்டர், பிட்டர், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் ஆகிய பிரிவுகளைச் சார்ந்த ஸ்டைபண்டரி டிரெய்னிக்கள் 46 பேரைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வந்துள்ளது.தேவைகள்:
பி.ஏ.ஆர்.சி., நிறுவனத்தின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.01.2013 அடிப்படையில் 18 வயது நிரம்பியவராகவும் 22 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். பிளஸ் டூ அளவிலான படிப்பை இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத்துடன் படித்திருப்பதோடு குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இத்துடன் கெமிக்கல் பிளான்ட் ஆபரேட்டர், பிட்டர், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் ஐ.டி.ஐ., சான்றிதழ் படிப்பை குறைந்த பட்சம் 2 ஆண்டு கால படிப்பாக படித்திருக்க வேண்டும். ஐ.டி.ஐ., அல்லது என்.சி.டி.வி.டி., அங்கீகாரம் பெற்ற படிப்பாக இது இருக்க வேண்டும். ஒரு ஆண்டு கால ஐ.டி.ஐ., படிப்பை முடித்தவர்கள் குறைந்த பட்சம் ஒரு ஆண்டு கால பணி அனுபவத்தை தொடர்புடைய பிரிவில் பெற்றிருக்க வேண்டும். பிளஸ் டூ படிப்பை மட்டும் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்தவர்கள் கெமிக்கல் பிளான்ட் ஆபரேட்டர் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும். இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்ச உயரம் 160 செ.மி.,யும், எடை 45.5 கிலோவும் இருக்க வேண்டும். மற்றவை:
இரண்டு ஆண்டு காலத்திற்கு மாதம் ரூ.6 ஆயிரத்து 200 முதல் ரூ.7 ஆயிரத்து 200 ஸ்டைபண்டு பெறும் பயிற்சி அடிப்படையிலான பதவியாகும் இது. இந்தப் பதவிக்கு தேர்ந்து எடுக்கப்பட ஒரு எழுத்துத் தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற முறையில் தேர்ச்சி இருக்கும். இது மைசூரில் நடத்தப்படும்.
இந்தப் பதவிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டால் பிணைய ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டியிருக்கும். இந்தப் பதவிக்கு பர்ந்துரை செய்யப்பட்ட படிவ மாதிரியில் விண்ணப்பங்களை முழுமையாக நிரப்பி பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். முழுமையான தகவல்களைப் பின்வரும் இணையதளத்தைப் பார்த்து அறியவும்.
முகவரி:
The Administrative Officer&III,
Bhabha Atomic Research Centre,
Post Bag No.01,
Yelwal Post, Mysore 571130
விண்ணப்பிக்க இறுதி நாள் :
01.01.2013இணையதள முகவரி:
