sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வேலை வாய்ப்பு மலர்

/

குருபார்வை

/

குருபார்வை

குருபார்வை

குருபார்வை


PUBLISHED ON : மே 16, 2017

Google News

PUBLISHED ON : மே 16, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எனது மகள் பிளஸ்2 வில் 990 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மருத்துவம் படிக்க விரும்பிய அவருக்கு குறைவான மதிப்பெண்கள் பெற்றிருப்பது வருத்தத்தை அளித்துள்ளது. பி.ஏ. ஆங்கில இலக்கியம் படிக்க வைக்கலாமா? அவருக்கு அதில் விருப்பம் உள்ளது.

- அருணாச்சலம், ஆண்டிபட்டி


உங்களது மகளுக்கான எதிர்காலத்தை உங்களது குடும்பம் எப்படி திட்டமிட்டுள்ளது என்பதை பொறுத்து இதை தீர்மானிக்கலாம். அப்படி திட்டமிடல் எதுவும் இல்லாதபோது தற்போது அதை தீர்மானிக்கலாம்.

ஆங்கில இலக்கியம் படிப்பது என்பது ஒரு காலத்தில் மிக மிக கவுரவமான அம்சமாக பார்க்கப்பட்டது. தற்போது கலைப் படிப்புகளும் அறிவியல் படிப்புகளும் அவற்றுக்கான மரியாதையுடன் பார்க்கப்படவில்லை. எந்தப் படிப்பை ஒருவர் படித்தாலும் அதை நுட்பமாகவும் முழு கவனத்துடனும் தொடர்ந்து படித்து முடிப்பது முக்கியம். துரதிருஷ்டமாக பிளஸ் 2 மதிப்பெண்கள் தான் ஒருவரை புத்திசாலியா இல்லையா என்று சமூகம் தீர்மானிக்கும் அம்சமாக உள்ளது. ஆனால் புகழ் பெற்று விளங்கும் தொழிலதிபர்களும் திறமையானவர்களாக அறியப்படும் ஆசிரியப் பெருமக்களும் பிளஸ் 2 வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களா என்று பார்த்தால் நிச்சயம் அப்படி இருக்க வாய்ப்பில்லை. எனவே உங்களது மகள் அவருக்கு விருப்பமான படிப்பை படிக்கட்டும். ஒரே ஒரு விஷயத்தை மட்டும் அவரிடம் கூறுங்கள். கல்லுாரிப் படிப்பில் உள்ள கவர்ச்சியான அம்சங்களில் மட்டுமே ஈடுபட்டுவிட்டு ஆழ்ந்த ஞானத்துடன் படிப்பை படிக்காவிட்டால் எந்த படிப்பும் பலன்தராது. எனவே துவக்கத்தில் உள்ள அக்கறையும் ஆர்வமும் கடைசி வரை படிப்பில் தொடர வேண்டும். இது உங்களுக்கு மட்டுமல்ல, அனைத்து கல்லுாரி மாணவருக்கும் பொருந்தும்.

பட்டப் படிப்பு 2ம் ஆண்டு படிக்கிறேன். இதற்கு பின் எம்.பி.ஏ., படிக்க விரும்புகிறேன். படிப்பது எனக்கு வேலை தருமா?

- புஷ்பா, மதுரை


இன்று எம்.பி.ஏ., படிப்பானது பொதுவாக வேலைகளை பெற்றுத் தருவதில்லை. நாட்டின் மிகச் சிறந்த கல்வி நிறுவனங்களில் படிக்கும் எம்.பி.ஏ., படிப்பு மட்டும் தான் சிறப்பான வேலைகளை பெற்றுத் தருகிறது. காரணம் அவற்றில் வெறும் படிப்புக்கு மட்டும் முக்கியம் தரப்படுவதில்லை. அடிப்படையில் SOFT SKILLS எனப்படும் திறன்களை பெற்றிருப்பவர் மட்டுமே இந்த கல்வி நிறுவனங்களில் சேர முடிகிறது. அல்லது இந்த நிறுவனங்களில் படிக்கும் போது மென்திறன்கள் பலம் பெறுகின்றன. எனவே உங்களது இலக்கு இந்த நிறுவனங்களில் ஒன்றில் படிப்பது என்றால் அந்த படிப்பில் தாராளமாக நீங்கள் சேரலாம். இல்லாதபோது பி.இ. பி.டெக்., படிப்பை முடித்துவிட்டு வேலைகளுக்கு தயாராகும் லட்சக்கணக்கானவர்களில் ஒருவராக மட்டுமே நீங்கள் எம்.பி.ஏ., படித்த பின்பும் வெளிவருவீர்கள். அதற்கு பதில் நீங்கள் பட்டப் படிப்பிற்குப் பின் போட்டித் தேர்வுகள் எழுதி வேலைக்கு செல்ல முயற்சிக்கலாம்.






      Dinamalar
      Follow us