
தற்போதைய சூழலில் டாப் திறன்கள் என்ன இருந்தால் சாப்ட்வேர், ஐ.டி. மற்றும் பிற சிறப்பான துறைகளில் நல்ல வேலைவாய்ப்பை பெறலாம்?
- ரவீந்திரன், திருப்பூர்:
யூ.ஐ. : User Interface Design பிரிவில் நீங்கள் சிறப்புத் திறன் பெற்றிருந்தால் ஆண்டுக்கு 5 முதல் 10 வரை சம்பளம் பெறலாம். மொபைல் டெவலப்மென்ட் : இந்த திறனானது ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ்., டெவலப்பர்ஸ், டெக்னிகல் ஆர்க்கிடெக்ட் , லீட் சாப்ட்வேர் இன்ஜினியர், புராஜக்ட் மேனேஜர் போன்ற உட்பிரிவுத் திறன்களை கொண்டது. இவற்றில் நீங்கள் பெற்றிருக்கும் திறனைப் பொறுத்து வேலை பெறலாம். ஆண்டுக்கு 5 லட்சம் முதல் 9 லட்சம் வரை சம்பளம் பெறக்கூடிய வேலைகள் இவை. வெப் ஆர்கிடெக்ச்சர் அண்ட் டெவலப்மென்ட் பிரேம்ஒர்க் : வெப் டெவலப்பர், சாப்ட்வேர் இன்ஜினியர், புராகிராமர் மற்றும் புராஜக்ட் மேனேஜர் போன்ற பணிப் பிரிவுகள் இந்தத் துறையில் உள்ளன. அனுபவம் மற்றும் திறனைப் பொறுத்து 3 முதல் 10 லட்சம் வரை சம்பளம் தாரக கூடிய பிரிவு இது.
கிளவுட் கம்ப்யூட்டிங் : இந்த பிரிவில் ஐ.டி. ஆர்க்கிடெக்ட், கிளவுட் சாப்ட்வேர் இன்ஜினியர், சாப்ட்வேர் ஆர்க்கிடெக்ட், டெக்கனிகள் கன்சல்டன்ட் போன்ற பணிகள் உள்ளன. பொதுவாக 5 முதல் 20 லட்சம் வரை ஆண்டுக்கு சம்பளம் தரக்கூடிய பிரிவு இது.
ஸ்டோரேஜ் சிஸ்டம்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட் : இதில் ஐ.டி. கன்சல்டன்ட், பிரின்சிபல் சாப்ட்வேர் இன்ஜினியர், டெஸ்ட் இன்ஜினியர், சிஸ்டம் இன்ஜினியர், சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர் போன்ற பணிகள் இந்தப் பிரிவில் உள்ளன. ஆண்டுக்கு 4.5 முதல் 10 வரை சம்பளம் பெறலாம்.
நெட்வொர்க் மற்றும் தகவல் பாதுகாப்பு : நெட்வொர்க் செக்யூரிட்டி இன்ஜினியர், நெட்வொர்க் செக்யூரிட்டி அனலிஸ்ட், இன்பார்மேஷன் செக்யூரிட்டி அனலிஸ்ட் மற்றும் செக்யூரிட்டி ஆபிசர் போன்ற பணிகள் உள்ளன. ஆண்டுக்கு 4 முதல் 10 வரை சம்பளம் பெறலாம்.
அல்காரிதம் டிசைன் மற்றும் கோடிங் : சாப்ட்வேர் டெவெலப்மென்ட் இன்ஜினியர், லீட் சாப்ட்வேர் இன்ஜினியர், சாப்ட்வேர் டெவலப்பர் போன்ற பணிகளில் இந்தப் பிரிவில் சிறப்புத் திறன் பெற்றிருப்பவருக்குக் கிடைக்கின்றன. சம்பளம் ஆண்டுக்கு 6 முதல் 10 லட்சம் வரை பெறலாம்.
புள்ளியியல் மற்றும் மைனிங்: டேட்டா சயின்டிஸ்ட், சீனியர் பிசினஸ் அனலிஸ்ட், டேட்டா அனலிஸ்ட், ஸ்டாடிஸ்டிசியன் டேட்டா அனலிஸ்ட் போன்ற பணிகள் இந்தப் பிரிவில் உள்ளன. திறனையும் அனுபவத்தையும் பொறுத்து இதிலும் ஆண்டுக்கு 3 முதல் 10 லட்சம் வரை சம்பளம் பெறலாம்.
டிஜிட்டல், எஸ்.இ.ஓ., எஸ்.இ.எம்., மார்க்கெட்டிங் : இந்த பிரிவானது டிஜிட்டல் மார்க்கெட்டிங் மேனேஜர், எஸ்.இ.ஓ., மார்க்கெட்டிங் ஸ்ட்ராட்டஜிஸ்ட், எஸ்.இ.ஓ., மேனேஜர், எஸ்.இ.ஓ., அனலிஸ்ட் போன்ற பணிகள் உள்ளன. 3 முதல் 6 லட்சம் வரை திறனுக்கேற்ப சம்பளம் பெறலாம்.
வங்கி, நிதி சேவை, இன்சூரன்ஸ், வரி : பைனான்சியல் பிளானர்ஸ், அட்வைசர்ஸ், மியூச்சுவல் பண்ட் அட்வைசர்ஸ், இன்ஸ்யூரன்ஸ் ஏஜெண்ட்ஸ், டாக்ஸ் கன்சல்டன்ட்ஸ் போன்ற பணிகளை உள்ளடக்கியது இந்தத் துறையில் ஆண்டுக்கு 4 முதல் 12 லட்சம் வரை ஊதியம் பெறலாம்.

