PUBLISHED ON : ஏப் 22, 2026

கிளிமூக்கு மா என, அழைக்கப்படும் தோதாபுரி மாங்காய் சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த விவசாய பட்டயம் படித்த விவசாயி பி.கிருஷ்ணன் கூறியதாவது:
மா, பலா, வாழை உள்ளிட்ட பல்வேறு விதமான மரங்களை நட்டுள்ளோம். அந்த வரிசையில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கிளிமூக்கு என, அழைக்கப்படும் தோதாபுரி மாங்காய் சாகுபடி செய்துள்ளேன்.
இந்த மாங்காய், பெங்களூரா, ஒட்டு மாங்காய், கலெக்டர் ஆகிய பல வித பெயர்களில் அழைப்பது உண்டு. இதை மாவட்ட கலெக்டர்கள் பிரபலப்படுத்தியதால், அவர்கள் பெயரில் அழைக்கப்பட்டது. மேலும், கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் அதிகம் சாகுபடி செய்வதால், பெங்களூரா என அழைக்கப்படுகிறது.
சமையலுக்கு காயாகவும், பழம் ஜூஸ்க்கும் பயன்படுத்தலாம்; கொத்து கொத்தாக காய்க்கக்கூடிய தன்மை இருப்பதால், விவசாயிகள் சாகுபடிக்கு ஏற்ப ரகம் என, கூறலாம். குறிப்பாக, நம்மூரில் காய்கறி சாகுபடி செய்யப்படும் மண் அனைத்து விதமான மண்ணில் சாகுபடி செய்யலாம். களிமண் நிலத்தில் சாகுபடி செய்யும் போது, அதிக உர செலவுகள் செலவிட நேரிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: பி.கிருஷ்ணன்,
93846 67714.
