/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
நர்சிங் படித்தவர்களுக்கு அரசு வேலை
/
நர்சிங் படித்தவர்களுக்கு அரசு வேலை
PUBLISHED ON : செப் 12, 2017

புதுச்சேரி அரசின் ஆரோக்யம் மற்றும் குடும்ப நல துறையில் காலியாக உள்ள 55 ஸ்டாப் நர்ஸ் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது: விண்ணப்பதாரர்கள் 2017 அக்., 3 அடிப்படையில் 18 - 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக பிளஸ் 2 படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பின் ஜெனரல் நர்சிங் அண்டு மிட்வைபரி/சைக்யாட்ரிக் நர்சிங் பிரிவில் டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். இவர்கள் நர்சிங் கவுன்சில் ஆப் இந்தியாவில் பதிவு செய்திருப்பதும் அவசியம்.
தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு மூலமாக தேர்ச்சி இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
\
விண்ணப்பிக்கும் முறை : தகுதி உடையவர்கள், விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளைச் சேர்த்து பின்வரும் முகவரிக்கு ரெஜிஸ்டர்டு தபாலில் அக்னாலட்ஜ்மென்ட் உடன் அனுப்ப வேண்டும்.
The Director, Directorate of Health and Family Welfare Services,
Victor Simmonel Street,
Old Maternity Hospital Building,
Puducherry - 605001
கடைசி நாள் : 2017 அக்., 3.
விபரங்களுக்கு : http://health.puducherry.gov.in/Recruitment.htm

